செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
களம் இறங்கி கவனமுடன் செய்ய வேண்டிய அமானிதம் posted byசட்னி.செய்யது மீரான் (.காயல்பட்டினம் )[19 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7032
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவங்கி உள்ள சாளை சலீம் காக்கா, கவிமகன் அப்துல் காதர் தம்பி , இன்னும் இப்பணியில் தங்களை இணைத்துள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் அன்பான வேண்டுகோள் .
இதில் உள்ள நீங்கள் அனைவர்களும் கடல் கடந்து பணியாற்றுபவர்கள் ,நல்லவர்கள், பொதுநலவாதிகள். நீங்கள் எடுத்துள்ள பணி மிகவும் முக்கியமானது களம் இறங்கி செய்ய வேண்டியது ,மேலும் அதை விட அமானிதமானதும் ஆகும்.
நமது நகர் மன்றத்திற்கு இது வரை தலைவர்களாக வந்தவர்களில் சிலரை தவிர பெரும்பாலானவர்கள் நல்லவர்களாக,மறைந்தும் மரியாதைக்குரியவர்களாக உள்ளார்கள்.
இதுபோன்று உறுப்பினர்களாக பலரைத்தவிர ஒரு சிலர்கள் மட்டுமே நல்லவர்களாக,மக்கள் பணியாற்றுபவர்களாக இருந்தார்கள்,மேலும் இருக்கிறார்கள் .யாரை நாம் உறுப்பினர்கள் ஆக்கணும் என்பதை விட யாரை நாம் ஆக்க கூடாது என்பதில் மிக கவனம் செலுத்தி, விழிப்புனர்வூடன் இருக்கணும் . நாம் யாரை முன்னிருத்துகிறோமோ அவர்களை எல்லா விதத்திலும் உணர்ந்து செயல் புரியணும் .
இறைவன் நாடினால் நல்லவர்கள் வருவார்கள் .
இப்பொழுது உறுப்பினர்களா உள்ள சிலர்கள் அடுத்து வர உள்ள தேர்தலில் மீண்டும் நிற்க ஆசைப்பட்டு அதற்கான வேளையில் இறந்க்கிவிட்டர்கள்.
பால் மட்டுமே குடித்தால் பரவாஇல்லை பால்தரும்பசுவின் மடுவையே அறுத்து தின்றவர்கள் ஆசை சும்மா விடுமா .ஆனால் உங்களை அல்லாஹ் சும்மா விடமாட்டன்.உஷார் உஷார்
நமது மக்களும் முன் போன்று உங்களை போன்று தறுதலைகளை தேர்ந்து எடுத்து இப்பொழுதும் தன் தலையில் தானே மண்ணை வாரி போட தயார் இல்லை. நீங்கள் குடிகாரர்கள், கயவர்கள், கள்ளர்கள் ,சுய நலவாதிகள் என்று தேர்ந்து எடுத்த ஒரு வருடத்திலே உங்களை அறிந்து இந்த நான்கு வருடத்தையும் கழித்து வருகிறார்கள் காயல் மக்கள்கள் ..
மீண்டும் உங்களை நம்பி பசுமாட்டை தந்து மடுவையும் இழக்க மாட்டோம் என மக்கள் முடிவு எடுத்து ரொம்ப நாளாகி விட்டது வேறு பிழைப்பை பார்த்து கொள்ளை அடித்த பொருள், சொத்துகளை நல்ல வழியில் செலவு செய்ய பாருங்கள். புண்ணியமாவது வரும் .
எங்கள் 5 வது வார்டு மக்கள்களின் பெரும்பாலான ஒட்டு பெற்று வார்டு உறுப்பினராகி ,அடுத்து தலைவரும் ஆகியுள்ள நடப்பு மன்ற தலைவர் அவர்களே கடந்த 5 ஆண்டுகாலமாக எங்கள் பகுதிக்கு வந்ததும் இல்லை, எங்கள் தேவை என்னவென்றும் தெரியாது இருந்து விட்டிர்கள் .இந்த அமர்வு முடிய இன்னும் சில நாட்கள் உள்ள இந்த நேரத்தில் வந்தாவது எங்களுக்கு என்ன செய்துள்ளிர்கள் .இன்னும் செய்யணும்
என்று பாருங்கள். மக்களிடம் கேளுங்கள்.உங்களை தேர்ந்து எடுத்த மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய அமானிதம் இது .அல்லாஹ் பெரியவன்.
இந்த அமைப்பு உருவாக்கி உள்ள நல்ல உள்ளங்கள் நம் மக்களுக்கும், நகருக்கும் அவசியமான ,அவசரமான இந்த கால கட்டத்தில் நல்லதோர் பணி புரிய களம் இறங்கி செயல் ஆற்றிட வேண்டி ,விரும்பி கேட்டுக்கொள்ளும் ஆயிரமாயிரம் காயலர்களில் நானும் ஒருவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross