செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சித் தேர்தலை கருத்த... posted byvsm ali (Kangxi , Jiangmen, China)[21 August 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 7071
MEGA படிப்பதற்கு நன்றாக உள்ளது. அதில் என்னை சேருங்கள் , என் குடும்பத்தார் அனைவரும் MEGA வில் இணைகிறோம் , அதற்காக உழைக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒருசிலர் மன்ற தலைவர் , மன்ற உறுப்பினர்களை சாடியும் உள்ளார்கள். ஒருமுறையாவது தலைவர் எங்கள் பகுதிக்கு வந்திருப்பாரா ? மன்ற உறுப்பினர் எங்கள் குறைகளை கவனித்திருப்பாரா ? என்றெல்லாம் கேள்விகள்.
நான் கேட்கிறேன் , மன்ற தலைவரோ , மன்ற உறுப்பினரோ நம் குறைகளை கவனிக்கும் அளவுக்கு நாம் விட்டுவைத்திருக்கிறோமா? அனைத்தையும்தான் நாமே வழிய சென்று லஞ்சமாக கொடுத்து, வேலையை முடித்து விடுகிறோமே! பிறகு, அவர்களுக்கு எப்படி தெரியும் நம் குறைகள். ஒரு வேலை நடக்க வேண்டும் என்றால், நாம் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும், நடக்காத பட்சத்தில் இவர்களை நாட வேண்டும். ஆனால் நமக்கோ அவசரம், லஞ்சத்தை வழிய சென்று கொடுத்து அந்த வேலையை முடித்து விடுகிறோம்.
அதிகாரிகளும் , ஏழை , பணக்காரன் பாகுபாடின்றி அனைவரிடமும் லஞ்சம் எதிர்பார்க்கிறார் . கொடுக்க முடியாதவர்கள் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
" மக்கள் எவ்வழியோ , அவ்வழிதான் மன்றமும்," Birth certificate முதல் death certificate வரை நாமே வழிய சென்று சில நூறுகளை கொடுத்து அவசரமாக காரியத்தை முடிக்கிறோம். யாருடைய தவறு ?
postman , money order பணம் கொண்டுவந்தால் , அவருக்கு " கை மடக்கு " . எதுக்கு என்று கேட்டால் " ஒரு சந்தோசத்துக்குத்தான் " என்கிறார்கள் . இது யாருடைய தவறு ?
குப்பை வண்டி வரும் நேரம் குப்பையை வண்டியில் கொட்டாமல் , வேலைக்காரி வந்ததும் , தெருவில் கொட்டுவது . இது யாருடைய தவறு ?
திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சி , ஏமாந்தவர்களுக்கு கண்ணீரை தண்ணீராய் கொடுப்பது . இது யாருடைய தவறு ? இதை ஒரு நகர் மன்ற தலைவரோ , உறுப்பினரோ வீடு வீடாக போய் பார்க்க சாத்தியமா ?
ரோட்டை அடைத்து , மேடை போட்டு , திருமணங்கள் , விருந்துகள். போக்குவரத்திற்கு இடையூறு . இது யாருடைய தவறு ?
வீடு கட்டுறேன், காங்கிரீட் போடுறேன் என்று சொல்லி , நாட்கணக்கில் , தெருவில் மணல் , கற்களை போட்டு , போக்குவரத்திற்கு இடையூறு . இது யாருடைய தவறு ?
ஆக இப்படி தவறுகள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மன்ற உறுப்பினரையும் , தலைவரையும் தேர்ந்தெடுத்தது நாம்தானே ? நாம் தவறு செய்து விட்டு , அவர்களை குறை சொன்னால் பொருந்துமா ? வரும் தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் அப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் , இப்படி உள்ளவராக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும் மக்கள், நாம் நகராட்சி விதிகளுக்கு உட்பட்டு, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, என்றைக்காவது நினைத்தது உண்டா?
ஆக , நாம் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த உறுப்பினர்களையும் , தலைவரையும் குறை சொல்ல கூடாது. குறை நம்மிடம்தான் உள்ளது . முதலில் அதை நிவர்த்தி செய்ய வழி தேடுங்கள்.
Administrator: Portion not relevant to news item edited
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross