செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எனது பதிவை சரியாகப் புரிந்துககொள்ளாமல் ஏனோதானோவென்று
மறுப்புரை எழுதி இருக்கின்றீர்கள். ஒரு வார்டு மெம்பராக அவரிடம்
இருக்கும் சிற்சில குறைகளை, ஒரு நகர்மன்றத் தலைவராக அவர்
செய்த நிறைகளை எண்ணி பொருந்திக்கொள்ளுங்கள் என்பதுதான்
எனது கருத்து. அடுத்த தலைமுறையின் தாகம் தீர்க்க உதவிய ஒரு
பண்பாளரின் கண்ணியம் காக்கப்படவேண்டும் என்று எழுதுவது
முகஸ்துதியா? முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லாஹ்வின்
உதவியால் வேறு யாரிடமும் கையேந்தாமல் பொதுசேவை ஆற்றி
வரும் எனக்கோ, எங்கள் கே.வி.ஏ.டி.அறக்கட்டளைக்கோ யாரையும்
முகஸ்துதி செய்து பயனடையும் வழக்கம் எந்தக்காலத்திலும் இல்லை.
இனிமேலும் அப்படிப்பட்ட சூழ்நிலை வராமல் இறைவன் காப்பாற்றுவான்.
பள்ளிப்பருவம் முதற்கொண்டு, இளம்பிறைக்கொடியை கரத்திலும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை இதயத்திலும் ஏந்திய எனது
ஆருயிர்த் தோழர் மர்ஹூம் முஹ்சீன் அவர்களது சேவையை
நீங்கள் சொல்லி தெரிந்து கொள்ள கூடிய நிலையில் நான் இல்லை.
இந்த புனிதமான ரமழானில், நான் வைத்த வைக்கின்ற கோரிக்கை
எல்லாம், கண்ணியத்திற்குரியவர்களின் சிறுசிறு குறைகளை
பெரிதுபடுத்த வேண்டாம் என்பது மாத்திரமே! மற்றவர்கள் என்ன
எழுதி இருக்கின்றார்கள் என்பதனை புரிந்து, பதில் எழுதுவதே
அறிவுக்குப் பொருத்தமானதாக இருக்க முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross