செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என் அன்பினும் இனிய சகோதரர்களுக்கு நான் ஏதோ தலைவர்
அவர்களை குறை கூறி கருத்தை
பதிவு செய்வதாக தவறாக புரிந்து கொண்டு வரிந்து கட்டி வருகிறிர்கள்.
அவர்கள் முதலில் நகர் மன்ற உறுப்பினராக
போட்டியிட்டு பெரும்பான்மை
மக்களின் வாக்கினை பெற்று அமோக வெற்றி பெற்று
பின்னர் உறுப்பினர்களின்
வாக்கு பெற்று நகர் மன்ற தலைவர் ஆனார்கள்
என்பதும் கவனத்தில் கொள்ளுங்கள் .
எங்கள் வார்டுஉறுப்பினர் நகர் மன்ற தலைவர் ஆக
வந்ததும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
வார்டு உறுப்பினராக போட்டியிடும் சமயம்
அந்த பகுதி மக்களுக்கு வாக்குறிதி கொடுத்து
வெற்றி பெற்றுள்ளார்கள்.வாக்களித்தால்
அதனை நிறைவேற்றாது போனால்
அமானிதம் பேணாதவர்களை அருள்மறை குர்ஆனில்
வல்லோன் அல்லாஹ் எச்சரிக்கும் வசனங்களை
நாம் அறிந்து இருக்கின்றோம்.
அது பெரியதோ ,சிறியதோ இருப்பினும் சரியே.
அந்த ஒரு நிலைமைக்கு அவர்கள் ஆளாகி விட கூடாது
என்ற எண்ணத்திலும் அவர்கள் மீது
நாங்கள் அளவு கடந்த மரியாதையும்.மதிப்பும்
வைத்து இருப்பதுடன் எங்களில் அவர்கள் ஒருவர்
என்ற நல்ல நோக்கத்திலும்
தான் இதனை எழுதுகிறோம்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
பிரதமராகவோ.முதல்வராகவோ,மந்திரியாகவோ
இருந்தாலும் ஒட்டு மொத்த
நாட்டுக்கும் உரியவர்கள் ஆனாலும்
அவர்கள் தான் தேர்ந்து எடுக்கப்பட்ட
அந்த தொகுதி மீது தனி கவனமும் , கரிசனமும் செலுத்துவதை
நாம் யாவரும் அறிந்தது தான்.
அப்படி பட்ட நப்பாசையும் எங்களுக்கு
இருப்பதும் எல்லா வகையிலும் நியாயமே.
நாங்கள் எங்களுக்கு உரியவர்களிடம்
கேட்கிகின்றோம்
இது போல் நீங்கள் உங்களுக்கு உரியவரிடம் கேளுங்கள்
அது உங்களின் உரிமையும் திறமையும் ஆகும்.
என் மரியாதைக்குரிய ஹபீப் காக்கா
யாரையும் குறை கூறவோ ,குற்றம் சாட்டவோ,
முகஸ்துதி ,குஷி படுத்தவோ நாம் முற்பட்டால் நமக்கு வேண்டால்
நல்லதாக தோன்றலாம் நம்மை தேர்ந்து எடுத்த மக்களுக்கு
அதில் எந்த நன்மையையும் இருக்காது ,
என எழுதியதை எல்லாம் விட்டு முகஸ்துதி என்ற வார்த்தைக்கு
மட்டும் தன்னிலை விளக்கம் தந்துள்ளிர்கள்
எங்கள் 5 வது வார்டுக்கு உறுப்பினர் ஆகி நல்லதோர் சேவை செய்த
மறைந்த ஜனாப்,ஜாவீத் முஹ்சீன் அவர்களை
இன்றலவூம் மக்கள்கள் மனதார பாராட்டி ,துவா செய்கிறார்கள்
என்று எழுதியது உங்களுக்கு பாடம் நடத்த இல்லை
இதனை காணும் என் அன்பு காயல்மக்களுக்கு
அறியபடுத்தவே ஆகும் அன்பரே .
இந்த புண்ணியம் பூத்து குலுங்கும் புனிதமான ரமழானில்,
நான் வைக்கும் , வைக்கின்ற கோரிக்கை எல்லாம்,
எனது பதிவை சரியாகப் புரிந்துககொள்ளாமல்
ஏனோதானோவென்று மறுப்புரை எழுதவோ,மற்றவர்கள்
என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பதனை புரிந்து,
பதில் எழுதுவதே அறிவுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பதே.
நம் சென்னை சைனா பஜாரில் மழை அடிக்க
சைனா நாட்டில் குடை பிடித்த கதையாக
தன் வீட்டிற்க்கு அருகில் குப்பை மேடு கிடக்க
அதற்க்கு எந்த தீர்வும் காணாததுடன்
திருவிளையாடல் தருமி கணக்கில் லஞ்சம் ,கைமடக்கு,
குப்பை வண்டி வரும் நேரம் குப்பையை வண்டியில் கொட்டாமல்
, வேலைக்காரி வந்ததும் , தெருவில் கொட்டுவது .
இது யாருடைய தவறு ,ரோட்டை அடைத்து , மேடை போட்டு ,
திருமணங்கள் , விருந்துகள். போக்குவரத்திற்கு இடையூறு .
இது யாருடைய தவறு
வீடு கட்டுறேன், காங்கிரீட் போடுறேன் என்று சொல்லி ,
நாட்கணக்கில் , தெருவில் மணல் , கற்களை போட்டு ,
போக்குவரத்திற்கு இடையூறு . இது யாருடைய தவறு ?
பலவித கேள்விகணைகள் இவை அனைத்தும் அவருக்கும் ,
அவர் வீட்டுக்கும் ,சார்ந்தவர்களுக்கும் பொருந்தும் தானே
.நாம் வேண்டால் நாடோடியாக இருக்கலாம்
நம் வீடும் ,குடும்பமும்
காயலில் தான் உள்ளது என்பதை உணர்வோமாக
.புனித மிகு லைலத்துள் கதர் இரவு ஆரம்பமாகிவிட்டது
நல்ல அமல்களை செய்து இரு உலகத்திற்கும்
நன்மைகளை தேடுவோமாக .
வல்லோன் அல்லாஹ் நமது எல்லா நல்ல அமல்களையும்
ஏற்று நற்கூலியினை தருவதுடன் நம் நல்ல எண்ணம் போல்
அனைத்தையும் சாதகமாக்கி தருவானாக ஆமீன் ,ஆமீன்
என் அன்பு தம்பி கவிமகனார் காதர்
சூடும்,சுவையும் பறக்க கிளம்பி விட்டது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross