Re:ரமழான்-1432: காட்டு மகுதூ... posted byvsm ali (kangxi , Jiangmen , China)[23 August 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 7120
இந்த பள்ளி , ஊரில் இருந்து தொலை தூரத்தில் உள்ளது . வருமானம் அதிகம் இல்லாதது. எனது நண்பர் மஹ்மூது நெய்னா அவர்கள்தான் தினமும் வந்து இந்த பள்ளியை அதிக சிரத்தையுடன் கவனித்து கொள்கிறார்.
நோன்பில் கஞ்சி போட இந்த பள்ளிக்கு அனுசரணைகள் அதிகம் கிடையாது . இருப்பினும் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ஒருநாள் , நம்மில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறார். அந்த நேரத்தில் நீங்கள் குறிப்பிடும் ஏழைகள் , வசதியற்றவர்கள் அங்கு சென்றிருந்தாலும் , அவர்களுக்கும் , அங்கு இவர்களைப்போன்ற மரியாதைதான் கிடைத்திருக்கும். ஆகையால் குறை கூறுவதை தவிர்க்கவும்.
இந்த பள்ளிவாசல் , ஒருசில காலங்களாக அயலூர்க்காரர்களின் நிர்வாகத்தில் , சீரழிந்து , சின்னாபின்னமாகியது. அதற்காக நீங்கள் எப்போதாவது குரல் கொடுத்தது உண்டா ? எனது நண்பர் மஹ்மூது நெய்னா மற்றும் இங்கே அமர்ந்திருக்கும் முக்கிய பிரமுகர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து , பள்ளியை நமது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். நீங்கள் குறிப்பிடும் எந்த ஒரு ஏழை பாழை யும் குரல் கொடுக்க வில்லை . இன்ஷா அல்லாஹ் , அடுத்த வருடம் இது போன்ற நிகழ்வுக்கு , நண்பர் மஹ்மூது நெய்னாவிடம் சொல்லி உங்களுக்கும் அழைப்பு விட சொல்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross