செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
MEGA நிர்வாகிகளின் மேலான கவனத்திற்கு. posted byAbdul Kader (Hong Kong)[23 August 2011] IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 7153
சகோதரர்கள் சாளை சலீம், பஜுல் கரீம், மற்றும் அனைத்து MEGA நிர்வாகிகளின் மேலான கவனத்திற்கு.
1. அதாவது உங்களது அமைப்பு தற்காலிகமானது நீங்கள் ஆலோசனைகள் வழங்கிவிட்டு சென்று விடுவீர்கள்.
2. உங்களது ஆலோசனைகள் தவறாகும் பட்சத்தில் நீங்ககள் பொறுப்புதாரிகள் ஆக மாட்டிர்கள்.
3. ஒரு பொறுப்பாளி சிங்கப்பூரிலும், இன்னும் ஒருவர் கத்தாரிலும் ஏனைய மற்றவர்கள் அமீரகத்திலும் இருந்து கணிணி மூலம் நல்லவர்களையும் வல்லவர்களையும் அடையாளம் கண்டு கொள்வீர்கள்.
4. நீங்கள் இருக்கும் நாடுகளில் வாக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாததால் ஏற்படும் விளைவே இது என்று நன்றாக புரிகிறது.
உங்களுக்கு ஒரு “வேதனையான, உண்மையான” நகைச்சுவை அரசியல் நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2001ம் ஆண்டு நமதூரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டிர்காக ஒரு பழம்பெரும் அரசியல்வாதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஒரு எழுச்சிமிகு நபர் நிற்கின்றார். கடுமையான போட்டி நிலவுகின்றது. அந்த எழுச்சிமிகு நபரின் சார்பில் மிகவும் நேர்மையான வாக்குச்சாவடி முகவர் பணி செய்கின்றார். கள்ள வாக்குகள் பதிவுகள் நடக்காத வண்ணம் நன்றாக செயல் படுகின்றார். ஏறத்தாழ பழம்பெரும் அரசியல்வாதி தோற்கும் நிலை ஏற்படுகின்ற வேளையில், பழம்பெரும் அரசியல்வாதி தனது அரசியல் சாதுர்யமாக எழுச்சிமிகு நபரின் சார்பில் பணி செய்கின்ற வாக்குச்சாவடி முகவரின் தேநீரில் பேதி மாத்திரைகள் கலந்து அவரை தந்திரமாக வாக்குசாவடியில் இருந்து அகற்றி கள்ள வாக்குகள் பதிவு செய்து மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மிக “நன்றாக” தனக்காக மட்டுமே பணிபுரிந்தார் என்பதை மிக சிலரே அறிவார்கள்.
2006 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் நமதூரில் வேறு ஒரு வார்டில் வேறு ஒரு அரசியல்வாதி வேறு விதமான யுக்தியை பயன்படுத்தி சொற்ப வாக்குகளைப் பெற்று வென்றார் என்பது வேறு நிகழ்வு.
MEGA சகோதர்கள் வேறு வேறு தேசங்களில் இருந்து video conference / web conference என்று High Tech சிந்தனையுடன் செயல்படும் போது நமது அரசியல்வாதிகள் ரூம் போட்டு Low Tech சிந்தனையுடன் வெற்றி காண்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அரசியல் குள்ளநரி தனங்கள், சூதுகள் மற்றும் சாதுரியங்கள் தேர்தல் களத்தில் நடக்கும் போது, MEGA சகோதர்கள் தம்தம் இருப்பிடங்களில் இருந்து கணினி ஆலோசனைகள் கூறுவதை தவிர்த்துவிட்டு அரசியல் களத்தில் குதித்து வெற்றி காண வேண்டும் என்பதே எங்களை போன்றோர்களின் ஆசை.
சாக்கடை, சாக்கடை என்று கூச்சல் போட்டால் மட்டும் சாக்கடை அகலாது அதில் நாம் நமது அயல்நாட்டு தொழிலை விட்டு இறங்க வேண்டும். அதனை MEGA சகோதர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என்பதில் அவர்களின் ஆரோக்கியமான ஆவலில் இருந்து தெரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross