Re:ரமழான்-1432: காட்டு மகுதூ... posted byvsm ali (Kangxi , Jiangmen , China)[24 August 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 7168
எல்லோருக்கும் பொது அழைப்பு கொடுக்க , இது ஒன்றும் " ஊர்ச்சாப்பாடு " அல்ல. ஒரு சிறிய நிகழ்வு . ஊரில் உள்ள அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக அழைக்கும் அளவுக்கு வசதியான நிர்வாகம் இல்லை. அதுபோல அளிக்காதவர்கள் என்று யார் வந்தாலும் , அவர்களை விரட்டி அடிக்கப்போவதும் இல்லை .ஆகையால் ,ஊரில் உள்ளவர்கள் தினமும் இப்தாருக்கு இங்கு வர சாத்தியம் இல்லை என்பதால், ஏதாவது ஒரு நாளில் , ஊரின் அனைத்து முஹல்லாவிலும் உள்ள முக்கியஸ்தர்களை வரவழைத்து இப்தார் நடத்துவது வழமையான ஒன்றுதான்.
மேலும் , நான் குறிப்பிட்ட நண்பர் மஹ்மூத் நைனா தினமும் இங்கு வந்து பள்ளி, தர்கா மராமத்து வேலைகளை கவனிப்பதை வழமையாக கொண்டுள்ளார். அதுபோல இந்த பள்ளியை அன்னியரிடமிருந்து மீட்க பாடு பட்டவர்களும் அவ்வப்போது வந்து ஆலோசனை சொல்கின்றனர். ( நண்பர் மீரான் நான் அந்நியன் என்று குறிப்பிட்டதை ஏதோ வெளிநாட்டவர் என்று நினைத்து விட்டார் போலும். உடன்குடி காரர்களும் அந்நியர்கள்தான் ) வேறு எந்த அப்பனும், சுப்பனும் வந்து , சீரழிந்த இந்த பள்ளியை சீராக்கி வைக்கவில்லை.
தயவு செய்து இனிமேலும் , யாரிடமும் அதிகம் குறை காணாமல் , மன நிறைவோடு இருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அதிகம் பறக்கத் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross