செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நடுநிலையாளர்களின் சிந்தனைக்கு! posted bykavimagan m.s.abdul kader (dubai)[24 August 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7186
இதற்கு முந்தைய செய்திகளில், பல்வேறு விவாதங்களில் அரைகுறையாக எழுதி, எனது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பதுங்கி விட்டவர்கள், எனது கட்டுரை வெளியாகி பத்துநாட்கள் கழித்து, MEGA அமைப்பிற்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத, சில விஷயங்களைக் கூறி, குழப்பம் விளைவிக்கும் முயற்சியை துவங்கி இருக்கின்றார்கள்.
முதலில் ஒரு கட்டுரையாளனாக எனது பதிலைக் கூறியாக வேண்டும். நகரின் அனைத்துப் பகுதி, கொள்கை மற்றும் வெவ்வேறு ஜமாஅத்களைச் சார்ந்த, கண்ணியமிக்கவர்களை, நகரின் முன்மாதிரி பொதுநல ஊழியர்களை, எந்த அரசியல் கட்சியையும் சாராத நல்லவர்களது சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்களினும் சிறந்த, நான் அறியாத நன்மக்கள் ஊரில் இருக்கலாம். இவர்கள்தான் என்று இல்லை! இவர்களைப் போன்றவர்கள் வரலாமே என்று சுட்டிகாட்டுவதற்குத்தான் என்பதனையும் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தேன்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், பல்வேறு கருத்து விவாதங்களில் வாசகர்களால் புறம் தள்ளப்பட்ட காழ்ப்புணர்ச்சியை இவர் கக்கி இருப்பது, எனக்கு எவ்வித
ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை.
MEGAவைத் தொடங்கும்போதே மக்கள் பணத்தில் சுகம் கண்டவர்கள் இந்த அமைப்பை சீர்குலைக்க எல்லாவித முயற்சியையும் கையாளத் தயங்கமாட்டார்கள் என்பது நான் எதிர்பார்த்ததுதான்.
மொத்தத்தில், எத்தனை அமைப்புகள் துவங்கப்பட்டாலும் நல்லது நடக்க பூனைக்கு மணியை கட்டினோம் என்ற திருப்தியோடு, தொடர்ந்து தொய்வின்றி எனது பணி தொடரும்.
MEGA துவங்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே உள்ளூர் மற்றும் சர்வதேச காயலர்களின் மகத்தான ஆதரவைப் பெற்று, இதன் ஆக்கப்பூர்வமான பணிகள் துவங்கப்பட்டுவிட்ட நிலையில், தனிநபர் தாக்குதல் மற்றும் குரோத எண்ணங்கள் வெளிப்படத் துவங்கி விட்டது. இவை அனைத்தையும் தாண்டி, இறையருளால் ஊழல்வாதிகள் வீழ்த்தப்பட்டே ஆகவேண்டும்.
அது நகர மக்களின்,நல்லவர்களின் கடமை.
நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம் கட்டுரையாளனாக,
கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர்,
அலைபேசி :00971 558864866,
ஐக்கிய அரபு அமீரகம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross