தேய்ந்துபோன ரிக்கார்டு மாதிரி ............ posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[25 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7220
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட இருப்பதுக்கு வாழ்த்துக்கள்.
சென்ற வாரம் நமது வெளிநாடு வாழ் காயல்மாநகர மக்களால் " நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ " (MEGA) என்ற அமைப்புத் தொடங்கப்பட்டது, நல்ல பல திட்டங்களை வைத்து - வருகின்ற தேர்தலுக்கு நல் வழிகாட்டி- மக்களை விழிப்புணர்வு ஏற்படச் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த வாரம் (நேற்று) நமது ஊரில் உள்ள சகோதரர்கள் " நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு " அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் - அதில் சமுதாய பொது அமைப்புகளும் கலந்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள் - இது வரவேற்க வேண்டிய செயலே.
--------------------------------------------
இப்படி பல அமைப்புகள் ஏற்படுவதை காட்டிலும் ஏதோ ஓரிரு அமைப்புகள் மட்டும் இருந்து மற்றவர்களை அரவணைத்து - செயல்களில் அவர்களின் வழிக்காட்டுதலை மக்களுக்கு காட்டினால் - தேர்தலை நல்ல முறையில் சந்தித்து , சிந்தித்து நல்ல உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து நகர் மன்றத்துக்கு அனுப்ப முடியும்.
மேலும் புதிது புதிதாக பல அமைப்புக்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியிலே தடுமாற்றங்களை ஏற்படுத்தாமல் இப்போது இருக்கின்ற அமைப்புக்களே ஒன்றாக கலந்தாலோசித்து ஐக்கியப் பேரவை , அனைத்து ஜமாஅத்துகள், சங்கங்கள் , பொது தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு வருகின்ற தேர்தலில் மக்களுக்கு நல்வழி காட்டி, ஊழலில்லாத , திறமையான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கச் செய்யுங்கள்.
--------------------------------------------
" நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு " ஆக இருக்கட்டும் அல்லது " நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ " ஆக இருக்கட்டும் எதுவானாலும்
உங்களுடைய எண்ணமும், செயலும் - சுயநலம் இல்லாது ஊர் மக்களுடைய நன்மையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு - அல்லாஹ்வின் மீது ஆணையாக செயல்பட வேண்டும்.
அப்படி உங்களால் நீதியாக செயல்பட முடியாது என்று நீங்கள் கருதினால் தயவு செய்து இந்த இரண்டு அமைப்புகளையும் அணுகாதீர்கள் அல்லாஹ்வின் தண்டனையை பயந்துக்கொள்ளுங்கள்.
இன்னும் இந்த மாதிரி அமைப்புகளை அமைத்து அதில் குளிர் காயலாம் என்று சூழ்ச்சி செய்ய வேண்டாம்.
சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்! என்பதை மறந்து விடாதீர்கள்.
--------------------------------------------
ஊடகங்களே !
இன்றைய காலம் ஊடகங்கள் மயமானது - ஊடகங்கள் மூலமே அத்தனையும் இயங்கிக்கொண்டிருப்பதால் - இந்த அமைப்புக்களின் செய்திகளை நம் ஊரில் உள்ள எல்லா ஊடகங்களும் பாகுபாடின்றி வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன் .
இதிலே ஊடகத்துறை கெளரவம் பார்க்க வேண்டாம் - யார் செய்தியை முந்தி வெளியிடுவது என்று நினைக்க வேண்டாம் - செய்திகள் மக்களை போய் சேரவேண்டும் என்ற ஓர் எண்ணம் மட்டுமே உங்களுக்கு இருக்க வேண்டும்.
அந்த செய்தியை மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம் உங்கள் பணி மிகச் சிறந்ததாகிவிடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
-------------------------------------------
தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு! மற்றும் வழிகாட்டு அமைப்பே !!
உங்கள் செய்திகளுக்காக எழுதப்படும் கருத்துக்கள் சில சமயம் உங்களை வேதனைப்படுத்தும் - ஏன் அதை படிக்கின்ற எங்களையும்தான் வேதனைப் படுத்தும் - அதை பொருட்படுத்தாதீர்கள்.
காரணம் சில பண்படாத மக்கள் நம்மிடையே உண்டு என்பதால்தான். ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லையே அது போல் எல்லா மக்களும் ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள்.
-------------------------------------------
மக்களே !
இந்த முறை வரும் தேர்தலில் தேர்தல் வழிகாட்டுதல்படி சிந்தித்து ,செயல்படுங்கள் நாம் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் (தேய்ந்துபோன ரிக்கார்டு மாதிரி ) எவன் வந்தாலும் ஒன்னும் செய்யமாட்டான் , எல்லோரும் ஊழல் பேர்வழிதான் , இந்த ஜென்மத்துக்கு திருத்தமுடியாது என்று அல்லாஹ்வை மறந்தவர்களாக பழைய பஞ்சாக்கத்தையே பாடி கொண்டிராமல் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.
அல்லாஹ்! நம் நகர் மன்றத்தை நன் மக்கள் நிறைந்த மன்றமாக ஆக்கியருள்வான் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross