அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரர் முத்து அஹ்மத் காக்கா அவர்களே!ஏதோ படம் காட்டி இயக்கம் ஆரம்பிக்க இதில் கலந்து கொண்ட அமைப்பினர்கள் எல்லாரும் முட்டாள்கள் அல்ல.கலந்து கொண்ட அனைவர்களும் ஒவ்வொரு அமைப்புகளில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். உங்களைப்போல் கம்ப்யூட்டர்ரில் உக்கார்ந்து ஈஸியாக கமெண்ட் சொள்ளக்கூடியவர்களும் அல்ல. களப்பணி செய்யக்கூடியவர்கள். அங்கே நடந்த செய்திகளை அப்படியே காயல்பட்ணம்.காம்-ல் போட்டிருக்கிறோம். அதை முதலில் படித்துவிட்டாவது கமெண்ட் கொடுங்கள். காக்கும் கரங்களின்கோஷம்,என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? "உதிரம் கொடுப்போம். உயிர் காப்போம்". "உதவிகள் செய்வோம். உயர்வு பெறுவோம்".(அல்லாஹ்விடத்தில்) இதுதான் எங்களின்கோஷம்,கொள்கை.
எங்களின் செயல்பாடு என்ன தெரியுமா?இரத்தம் தானம் செய்தல்,முதலுதவி செய்தல்,மரம் நடுதல்,பள்ளிவாசல்களை தூய்மை படுத்துதல்,மற்ற காயல் நல மன்றங்கள் ஊரில் நடத்தும் நிகழ்ச்சிகளில் களப்பணி செய்தல்,நகர் நலப்பணிகள்
செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த பணிகளில் எல்லாம் அல்லாஹ்விடத்தில் நன்மையை நாடி மட்டுமே செய்து வருகிறோம்.அதில்லாமல் படம் காட்டுவதற்கோ,நாடகம் போடுவதற்கோ எங்களுக்கு தெரியாது.எங்களைபற்றி தெரியவேண்டும் என்றால் ஊரில் உள்ள பொது அமைப்புகளிடம் விசாரித்து தெரிந்து கொள்ளவும்.அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கிறான்.சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்.ஊரில் உள்ள எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்ததில் எதாவது தவறு இருக்கிறதா? சொல்லுங்கள்.திருந்துகிறோம்.முன்னே சொன்னது போல் நாங்கள் வயதில் சிறியவர்கள்.பொது வாழ்க்கைக்கு வந்து விட்டோம்.இந்த மாதிரியான கமெண்ட்டும் கேட்டு பழகத்தான் வேண்டும்.எல்லாத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்.அஸ்ஸலாமு அலைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross