அன்பு சகோதரர் முத்து அஹ்மத் அவர்களுக்கு posted byசட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம்)[26 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7329
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பு சகோதரர் முத்து அஹ்மத் அவர்களுக்கு என் மனப்பூர்வமான வேண்டுகோள். நான் 19 -08 -2011 இதில் எனது கருத்தை
உள்ளதை உள்ளபடி அல்லாஹ்வை முன்னிறுத்தி கீழ் காணும் பதிவு செய்து இருந்தேன்.
இதில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட உங்கள் நண்பர் ஒருவர் சொன்னதாக சொல்லி காக்கும் கரங்கள் அமைப்பை குறை கண்டு கருத்து பதிவு செய்து இருந்திர்கள். மிகவும் வேதனை அளிக்க கூடியதாக உள்ளது. அதற்க்கு அந்த அமைப்பின் தலைவர் வல்லோன் அல்லாஹ்விற்கும், நம் உயிரினும் மேலான உத்தம நபிகள் நாயகம் அவர்களுக்கும் உகந்த வகையில்அழகான முறையில் மிகவும் விளக்கமாக, விபரமாக எடுத்து கூறியும் இருந்தார். வரவேற்கவேண்டியது. மேலும் சமுக ஆர்வலரும், சமுதாய நல விரும்பியுமான
நோனா.மஹ்மூத் மாமா மற்றும் நம் காயல் சொந்தங்களும் பதிவு செய்துள்ளார்கள்.
பின்னரும் நீங்கள் அதனை சாடுவதோடு மட்டும் அல்லாது மக்கள் திலகம் MGR இன் எங்க வீட்டு பிள்ளை பட பாட்டை போட்டு
மிரட்டும் தொனியில் பதிவு செய்து உள்ளீர்கள்.வருத்தத்திற்கு உரியது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எந்த நல அமைப்பை சார்ந்த நாங்கள் யாரும் அடிமை சாசனத்தில் அடிமை என கையெழுத்து போட்டு கொடுக்கவில்லை, அவர்களும் அதை கேட்கவில்லை.
எங்களின் நோக்கம் எல்லாம் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதே காக்கா. தயவு செய்து இது போன்ற செயலில்
நாம் யாரவது ஈடுபட்டால் நம் ஒற்றுமைக்கும் ,ஊழல் அற்ற நகர் மன்றம் அமைய வேண்டும் என்று உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் எண்ணத்தில் சோர்வும், பின்னடைவூம்,பிரிவினையும் ஏற்பட வாய்புள்ளது. அதற்க்கு நாம் இடம் கொடுத்து விட வேண்டாம்.
இதில் எனது பெயர் குறிப்பிட்டு நீங்கள் சொல்லி இருப்பதால் எனக்கு பிரியமான நபர் ஆக நீங்கள் இருக்கலாம் என்ற நல்ல நோக்கத்தில் வேண்டுகின்றேன் .நோன்பு திறப்பு ஏற்பாடும் செய்து இருந்தார்கள். ஊரில் உள்ள பெரும்பான்மை நல அமைப்புகள் நண்பர்கள் வந்தும் நல்லதோர் கருத்துகளை பரிமாற்றம் செய்தோம். இதற்கான எல்லா வித ஏற்பாடுகளும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் நண்பர்கள் நல்ல முறையில் செய்து உபசரித்தார்கள். கோடானு கோடி நன்றிகள்.
ஒற்றுமையின் கயிற்றை பற்றி பிடிப்போம் அந்த ஓரிறையின் உதவியால் வெற்றி பெறுவோம்.ஆமீன்
பகைதனை போக்கி, பலம்தனை பெருக்கி ஒற்றுமையுடன் நடை போட்டு வெல்வோம்.
நண்பர்களே நல்லதோர் நகர் மன்றம் காண நாடும் உங்களில் ஒருவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross