அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் செய்யத் அஹமத் காக்கா அவர்களே, நான் அல்லாஹ், ரசூலை முன்னிறுத்தி சொல்கிறேன். யாரையும் நாங்கள் இப்தாருக்கு அழைத்து வலுக்கட்டாயமாக இந்த அமைப்பை துடங்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக கலந்தாலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 24 மாலை அசர் தொழுகைக்குப்பிறகு ஈக்கிஅப்பா தைக்காவில் வைத்து நடைபெறும். இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். அத்துடன் இப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றுதான் அமைப்புகளுக்கு அழைப்பு கொடுத்து இருந்தோம். அதில் கலந்து கொண்டவர்கள் போட்டோதான் நமது காயல்பட்ணம்.காம் இல் வந்து இருக்கிறதே? அதில் கலந்து கொண்டவர்களில் எல்லாரிடமும் நீங்கள் கேட்கலாம்.
சரி, வந்திருந்த அனைவர்களும் ஒவ்வொரு அமைப்புகளின் நிர்வாகிகள், நாங்கள் எப்படி அவர்களை கட்டாயப்படுத்தி
இருக்கமுடியும். கண்டிப்பாக இல்லை. அவர்களிடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் நாங்கள் இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம். (முத்து அஹமத் காக்கா அவர்களுக்கு) காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நான் முன்னே சொன்னதுபோல் காக்கும் கரங்கள் ஒரு திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதுமட்டும் இல்லாமல் நாங்கள் வயதில் மட்டுமே சிறியவர்கள். தப்பு இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள். கண்டிப்பாக திருந்துவோம். கட்டளை இடுங்கள், செய்கிறோம். ஆனால் தயவு செய்து மிரட்டாதீர்கள். எங்களை வாழ்துங்கள். வளர்கிறோம்.
நான் இப்போதும் கேட்கிறேன். நாங்கள் செய்த தவறுதான் என்ன? எல்லாரும் பாராட்டும் போது நீங்கள் மட்டும் ஏன் எங்களை இழிக்கிறீர்கள். வயதில் சிறியவன் கேட்பதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். அஸ்ஸலாமு அலைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross