அருமையான , அற்புதமான தீர்மானங்கள் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[05 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7683
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அருமையான , அற்புதமான தீர்மானங்கள் - உள்ளாட்சி அமைப்புக்கு அரசியல் அவசியமில்லை என்பதை அழகாக எடுத்துக்காட்டிய தீர்மானம்.
அரசியல் கட்சி சார்பாக கட்சி சின்னங்களில் நிற்பவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்று முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது - இப்படித்தான் இருக்க வேண்டும் எல்லா வார்டுகளின் செயலும் - இதுதான் உண்மையான உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் முறை.
----------------------------------------
சில வார்டுகளில் பல ஜமாஅத்'கள் சேர்ந்து வருவதால் மற்ற ஜமாஅத்'களையும் கலந்து ஒருமித்த கருத்துடன் தேர்தலை சந்திக்க ஒரு கமிட்டியை அமைத்து செயல்படுவது மிகவும் சிறந்த பண்பு.
தலைவரை தேர்ந்தெடுக்க அனைத்து ஜமாஅத்'களிலும் முறையாக கலந்து ஆலோசித்து செய்ய வேண்டும் என்பது பாராட்டுக்குரியதும் , ஊர் ஒற்றுமையை பிரதிபலிக்கக்கூடிய செயலுமாகும்.
----------------------------------------
தேர்தல் வழிகாட்டு அமைப்பான 'மெகா' என்னும் தற்காலிக அமைப்பின் பல அம்சங்களும் இந்த தீர்மானத்தில் பார்க்க முடிகிறது - இதே போல் நம் ஊரின் அனைத்து ஜமாஅத்' களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் - இன்ஷா அல்லாஹ்! இந்த முறை நம் நகராட்சிமன்றம் மிகவும் சிறந்தவர்களை உறுப்பினர்களாகவும், தலைவராகவும் பெற்று மக்களுக்கு நல்ல முறையில் தொண்டாற்றும் என்பதில் ஐயமில்லை.
நம் ஊரில் உள்ள அனைத்து சங்கங்கள், ஜமாஅத்'கள் , பொதுத்தொண்டு நிறுவனங்கள் எல்லாம் இது போன்றும் நமது 'மெகா' சகோதரர்களின் தற்காலிக தேர்தல் வழிகாட்டு அமைப்பு போன்றும் செயல்பட்டு நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்லது.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் மக்களை ஒற்றுமையுடன் செயல்பட்டு - நகராட்சி மன்றத்தை தலை சிறந்த மன்றமாக அமைத்து -அனைவரும் பயன் பெற கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross