செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினத்தில் ‘மெகா‘வின் நிர்வாகத்தளம் கட்டமைக்கப்பட்டது! களப்பணியாற்றும் அலுவலகமும் செயல்படத் துவங்கியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உண்மை நிலையை உணர்ந்தவர்கள் 'மெகா' வை விமர்சிக்க மாட்டார்கள் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[07 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7760
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மெகா சகோதரர்கள் களப்பணியாற்றுவதற்காக அலுவலகம் துவக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
அவசரப்படாமல் படிப்படியாக ஒவ்வொரு செயலையும் நீங்கள் செய்து வருவது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது - இன்ஷா அல்லாஹ்! நிச்சயமாக மெகா இந்த தேர்தலில் நம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
----------------------------------------
நமது சகோதரர்கள் பலரும் பல கருத்துக்களை இங்கே பதிகிறார்கள் - வெளியிலும் பேசிக்கொள்கிறார்கள் - என்னதான் அவர்கள் கருத்துக்களை பதிந்தாலும் , பேசிக்கொண்டாலும் இன்னும் மெகாவின் கொள்கைகளை அவர்கள் சரியாக புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.
எனக்கு தெரிந்தவரை மெகா'வின் கொள்கைகள் எல்லாம் சிறந்ததாகவே இருக்கிறது - எதுவும் ஒளிவு மறைவு இல்லை.
எந்த விதத்திலும் எதையும் , அவசரக்கோலத்தில் முடிவு எடுத்து, பின் விளைவுகளை சிந்திக்காமல் தேர்தலை சந்தித்து மக்கள் சிரமப்படுவதைவிட - முற்கூட்டியே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சிந்தித்து செயல்பட வைப்பதே மெகா'வின் கொள்கையாக இருக்கிறது.
----------------------------------------
பொதுவாகவே உள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் அவசியமில்லை - அதுவும் நம்ம ஊருக்கு நிச்சயமாக அரசியல் வேண்டாம்.
வார்டு மெம்பர்களை அந்தந்த பகுதி ஜமாஅத்'துகளும் - தலைவரை ஒட்டுமொத்த ஜமாஅத்'துகளும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஒற்றுமையான , நேர்மையான கொள்கைதான் அவர்களது கொள்கை.
இதிலே எந்த உள்நோக்கமோ, ஆதாயமோ இல்லை , இதை நாம் அனைவரும் கடை பிடித்தால் இன்ஷா அல்லாஹ்! வெற்றிபெறுவோம்.
நல்லதொரு நகர்மன்றம் அமைப்போம்.
-----------------------------------------
மெகா'வில் அங்கம் வகிப்பவர்கள் ஊரில் உள்ள அத்தனை ஜமாஅத்'துகளை சேர்ந்தவர்களாகவும், பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாகவும் , பல சங்கங்களை சேர்ந்தவர்களாகவும், மார்க்க ரீதியாக பல கொள்கைகளை உடையவர்களாகவும் , பல பகுதிகளை சேர்ந்தவர்களாகவும் இருந்தாலும் அந்த சகோதரர்களின் நோக்கமும், கொள்கையும் ஒன்றுதான் " நமது நகர்மன்றம் நேர்மையாளர்களால் அமைய வேண்டும் என்பதே". அதனால் இந்த கொள்கையின் உண்மை நிலையை உணர்ந்தவர்கள் 'மெகா' வை விமர்சிக்க மாட்டார்கள் மேலும் உதாசீனப்படுத்தவுமாட்டார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross