பேரவை கூட்டம் குறித்த தன்னிலை விளக்கம் posted byகாயல் எஸ்.இ.அமானுல்லாஹ். (Kayalpatnam)[08 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7787
காயல்பட்டினம் நகர்மன்ற தோதல் சம்பந்தமாக இன்று (08-09) காலை ஜலாலியாவில் நடைபெற்ற அனைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்பகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீhமானங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளீர்கள். பின்னர் விரிவான ஏனைய தீர்மானங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளீர்கள நன்றி
தங்களால் வெளியிடப்பட்ட தீர்மானங்கள் உறுதி செய்யப்படாத நிலையில் வெளியிடப்பட்டுள்ளதை அறிந்து வருந்துகிறேன். கூட்டத்தை ஏற்பாடுசெய்த காயல்பட்டினம் ஐக்கிய பேரவை நிர்வாகத்திடமிருந்து தங்கள் செய்தி முகவர் தகவல்களை பெற்றிருக்க வேண்டும். அவசரத்தில் அவர் தந்த தகவல் தவறான எண்ணத்திற்கும், விமர்சனத்திற்கும் ஆளாகிஇருப்பது வருந்தத்தக்கது.
தலைவரை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் இடம்பெறும் ஜமாஅத்துகளுக்கு தலா இரண்டு வாக்குகளும், பொதுநல அமைப்புகளுக்கு தலா ஒரு வாக்கும், ஐக்கிய பேரவை சார்பில் 25 வாக்குகளும் நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளீர்கள். இதில் வாக்கு என்ற வாசகம் தீர்மானத்தில் எங்கு வந்தது?
நகராட்சி தலைவரின் தேர்வு சுமூகமாக நடைபெற அமைக்கப்படும் தேர்வு குழுவில் இடம்பெறுவோர் ஒன்றுகூடி சுமூகமுடிவு காண்பார்கள். இதுதான் தீர்மானத்தின் நோக்கமாகும். கூட்டத்தில் இதற்கான விளக்கமும் சொல்லப்பட்டுவிட்டது.
ஊர்நலனில் அக்கறை உள்ள பெரியவர்கள், அனுபவசாலிகள், பொதுவாழ்க்கையோடு தொடர்புடையோர் இவர்களின் ஆலோசனைகளையும் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நிறைவேற்றப்பட்டதுதான் - நகரின் பல்வேறு பகுதிகளை சார்ந்த 25 பேர் நியமனம் பற்றிய தீர்மானமாகும். இவர்கள் அனைவரும் ஐக்கிய பேரவையை சார்ந்தவர்கள் அல்லர். ஐக்கிய பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நகர பிரமுகர்கள். இந்த விளக்கமும் கூட்டத்தில் சொல்லப்பட்டுவிட்டது.
மேலும் தாங்கள் குறிப்பிட்டு இருப்பதைபோல் 25 நபர்களின் பெயர்களை தற்போது எப்படி வெளியிட முடியும்? ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பட்டியல் வந்தபிறகுதான் இவர்களை தெரிவுசெய்ய முடியும். இல்லையெனில் ஒரே நபரே இரண்டு பட்டியலுக்குள் வர வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
ஜமாஅத்கள் பற்றிய விபரம் வெளியிடப்பட வில்லை என குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு பெரிய குறையல்ல நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஸ்டேஷன் பள்ளி, திருச்செந்தூர் பள்ளி, காட்டுமொஹ_தும் பள்ளி மற்றும் கே.எம்.டி.வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளி ஆகியவைகளை தவிர்த்தால் மொத்தம் 26 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை தலைமையாக கொண்டவையே நமதூர் ஜமாஅத்துக்கள்.
மேலும் ஐக்கிய பேரவையின் அனைத்து நடவடிக்கைகளிலும் எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவைகளில் விமர்சனங்கள் இருக்கலாம. ஆனால் அவைகளை எல்லாம் மறந்துவிட்டு இத்தேர்தல் சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றுகூடி எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துவதின் மூலம் நமது ஒற்றுமை பலப்படும். ஊர்நலன் பாதுகாக்கப்படும். நம் சமூகம் கடந்த தேர்தலில் இழந்த வார்டுகளை திரும்பபெற முடியும் என்றெல்லாம் கூட்டத்தில் விளக்கி சொல்லப்பட்டது.
ஆக உண்மை இப்படி இருக்க அவசரத்தில் அல்லது ஆர்வத்தில் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட செய்தியால் நமது ஒற்றமைக்கு சேதாரம் ஏற்பட்டுவிட கூடாது என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நோக்கத்தை நான் சந்தேகிக்கவில்லை. ஊர் நலனை முன்னிறுத்தி தாங்கள் ஆற்றும் சேவைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இக்காலத்தில் இணையதளம் என்பது சக்தி வாய்ந்த தகவல் ஊடகம். பொறுப்புனர்வு உள்ள தங்களைப் போன்ற கற்றறிந்த இளைஞர்கள் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை உளமாற ஏற்கிறேன்.
எனவே தங்கள் இணையதளத்தில் வந்துள்ள செய்தியை படித்து தவறான முடிவுக்கு வந்திருப்பவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவும், இன்னும் பலர் தவறான முடிவக்கு வராமல் இருக்கவும் தயவுகூர்ந்து எனது இந்த விளக்கத்தை ஊர் ஒற்றுமையை ஐக்கியத்தை மனதில் கொண்டு சுருக்காமல் தணிக்கை செய்யாமல் வெளியிடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாம்வல்ல இறைவன் உங்களின் நன்நோக்கங்களுக்கும் முயற்சிகளுக்கும் வெற்றியை தந்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross