பேரவை நிர்வாக குழுவில் உள்ள தலைவர் ,செயலாளர்கள் உட்பட நிர்வாகதினர்கள் இந்த குழுவில் இருப்பதே சாலச்சிறந்ததும்.மிகவும் பொருத்தமும் ஆகும். posted byசட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம் )[08 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7804
அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது முஹிய்தீன் பள்ளி ஜமாத்துக்கு உட்பட்ட மஜ்லிசுள் கறம் சங்க அமைப்பின் சார்பாக ஐய்க்கிய பேரவையின் கூட்டத்தில் என் வாழ்நாளில் முதன் முதலாக கலந்து கொண்டேன்.
பல தடவை நடந்துள்ள கூட்டத்தின் செய்திகளை இந்த வலை தளத்தின் ஊடாக கண்டும் மற்றும் கலந்து கொண்டவர்களின் மூலமாகவும் அறிந்துள்ளேன்.
தமிழகத்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சிகளின் எண்ணிலடங்கா மாபெரும் மாநாடுகள், பொது கூட்டங்கள் என பலவற்றில் கலந்து கொண்ட அனுபவம் எனக்கு இருந்தாலும் அந்த நிகழ்வுகளில் தீர்மானங்கள் முதலிலேய அவர்களின்
உயர் மட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி வடிவமைத்துள்ளதை முன்மொழிய, அந்த அமைப்பின் அபிமானிகள் வழிமொழிவார்கள் பின்னர் ஏற்க்கப்படும். (இதில் எத்தனை நிறைவேறுமோ அவர்களுக்குதான் தெரியும்)
அதுபோன்று இங்கும் காண எனக்கு ஆச்சரியம்.
ஒரே ஒரு அமைப்பு மட்டும் கலந்து கொள்ளும்
அல்லது நடத்தும் நிகழ்வாக இருந்தால் தீர்மானங்கள்
உடனுக்குடன் நிறைவேற்றுவதில் தவறில்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து
கொள்ளும், நடத்தும் நிகழ்வுகளில் பல தரப்பட்ட
பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
அவர்கள் சேர்ந்துதான் அந்த நிகழ்வின் ஆரம்பத்திலோ, இறுதியிலோ தீர்மான முன்வடிவை கொண்டு வருவார்கள்.
இதனை சிலர் ஏற்கலாம், பலர் எதிர்க்கலாம்.
இதுதான் ஜனநாயகம்.
சட்டமன்ற நிகழ்வுகள், மக்களவை நிகழ்வுகளை தொலைகாட்சி பெட்டிகளில் நேரலைகளாக அனைத்து பொதுமக்களும் காணுகின்றார்கள். அங்கு கொண்டு வரப்படும் தீர்மானங்கள், திட்டங்கள் சபாநாயகர்களால் ஜனநாயக முறையில் எப்படி நிறைவேற்றபடுகிறதென்பதை பார்க்கிறார்கள். இதன் மூலம் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள்.
இன்று மட்டும் அல்ல என்றும் நடக்கும், நடந்த
இந்த பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் பிரதிநிதிகள்தான்.
ஏற்கவோ, எதிர்க்கவோ அவர்களில் எவருக்கும் உரிமை இல்லை. அவர்களும் அறிவார்கள் அதை விட நீங்களும்
மிக நன்கு அறிவீர்கள்.
இந்த தீர்மானங்கள், திட்டங்களை அவர்களது அமைப்பின்
ஒட்டுமொத்த அங்கத்தினரிடம் கொண்டு சேர்த்து
தேவைபடின் விவாதோமோ, ஓட்டு எடுப்போ செய்து
தங்களுக்கு அறிய தந்து, அதரவு தருவதுதான் ஜனநாயகம்.
இதுவே எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும், அவனது நேசரும்
நம் இரு உலக ஒரே ஒரு தலைவருமான நம் உயிரினும் மேலான உத்தம நபிகளாருக்கும் உகந்த நற்செயலாகும், உரைத்த நல்வழியாகும்.
பேரவை என்பது காயலின் இருபத்தி ஆறு பள்ளிவாசல்களின்
பிரதிநிதிகள் அடங்கிய ஒரு கூட்டு குழு.
இதன் மூலம் வந்தவர்கள்தான் நிர்வாகிகளாக, செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுகின்றிர்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.
ஜமாத்துகளுக்கு இருவர், பொது அமைப்பிற்கு ஓன்று
(இதற்க்கு என்ன அளவுகோலோ அல்லாஹ்விற்கு வெளிச்சம்)
என்பது இது சரியான தீர்வு. அனைவராலும் ஏற்றுகொள்ள கூடியதே.
பேரவை சார்பாக 25 நபர்கள் ஏன்? எதற்காக? என்பதுதான்
எனக்கு உட்பட எல்லோருக்கும் புரியதா புதிராக உள்ளது...
நாங்கள் சார்ந்த பள்ளியில் இருந்தும், பொது அமைப்பில்
இருந்தும் கலந்து கொள்ள கூடியவர்கள் ஆகட்டும்,
பேரவை பதவிகளில் உள்ள நீங்களாக இருந்தாலும்
எந்த ஒரு பள்ளி, அமைப்பில் வழியாக வந்தவர்கள்தான்.
யாரும் இதற்க்கு அப்பாற்பட்டு வந்தவர்கள் இல்லை.
25 நபரை நீங்கள் தேர்வு செய்தாலும் அதில் ஒரு நபர் கூட
விமர்சனத்திற்கோ, விவாதத்திற்கோ ஆளானால்
அது நாங்கள் பிறந்த இந்த மண்ணிற்கு இழுக்காகும்.
இதன் மானமும், மரியாதையும் ஒவ்வொரு காயலனின்
சொத்தாகும். இதனை இழக்க நாங்கள் யாரும் தயார் இல்லை.
வெளியில் இருந்து நபர்களை தேடி தெரிவு செய்வதை விட
இதற்கு பதிலாக பேரவை நிர்வாக குழுவில் உள்ள
தலைவர், செயலாளர்கள் உட்பட நிர்வாகதினர்கள்
இந்த குழுவில் இருப்பதே சாலச்சிறந்ததும், மிகவும்
பொருத்தமும் ஆகும்.
இதுவே ஒட்டுமொத்த காயல்ர்களின் எண்ணமாகும்.
நாங்கள் உங்களுக்கு செய்யும் கண்ணியமாகும்.
மேலும் உங்களை பதவியில் உட்கார வைத்து
அழகு பார்க்கும் ஒட்டுமொத்த காயலருக்கும்
நீங்கள் செய்யும் மரியாதையும் ஆகும்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.
நகரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளை
அழைத்து கட்சி சார்பாக யாரும் போட்டி இட வேண்டாம்
என் வேண்டுகோள் விடுத்ததை அன்போடு
ஏற்று கொண்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும், இதனை வழி எடுத்து செய்த பேரவை அங்கத்தினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இதன் மூலம் நீங்கள் இரு தரப்பினருமே காயல் மக்களின் மனங்களில் வெற்றியை பெற்றுவிட்டிர்கள்.
நல்லதோர் நகராட்சி அமைய எண்ணும் உங்களை போல் ஒருவன்
அன்புடன்.சட்னி.செய்யது மீரான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross