உறுதி மொழியைப் பார்த்தீர்களா ? posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[10 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7887
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
1 வது வார்டின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கோமான் தெருக்கள் ஜமாஅத் சார்பாக சகோதரர் லுக்மான் அவர்களை ஜமாஅத் தேர்ந்தெடுத்திருப்பதுக்கு வாழ்த்துக்கள்.
சகோதரர் லுக்மான் அவர்கள் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவின் வாசகத்தை பாருங்கள் அதில் எத்தனை அர்த்தங்கள் என்ன அற்புதமான வாசகங்கள்.
மாஷா அல்லாஹ்! சகோதரர் கொடுத்திருக்கிற உறுதி மொழியைப் பார்த்தீர்களா ? இதைத்தான் அடியேன் ஒவ்வொரு விசயத்திலும் அறிவுறுத்தி வருகிறேன்.
இந்த மாதிரியான உறுதிமொழியை போட்டிப்போடக்கூடிய ஒவ்வொருவரும் - மக்களுக்கும் , ஜமாஅத்'துக்கும் - உண்மையாகவே வாக்குறுதியாக அளித்தால் நிச்சயமாக இன்ஷா அல்லாஹ்! யாரும் வழி தவறி நடக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் புறமிருந்து அவர்களுக்கு ரஹ்மத் இறங்கும் நேர்வழியில் நடந்து செம்மையாக சேவை செய்வார்கள் - நமது நகர்மன்றம் சிறப்பாக செயல்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! சகோதரர் லுக்மான் போன்ற நேர்மையாக செயல்படக்கூடியவர்களை நம் நகராட்சிக்கு உறுப்பினர்களாக கிடைக்க செய்து சிறந்த நகர்மன்றமாக செயல்படக் கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross