Re:முஸ்லிம் லீக் கட்சியின் ப... posted bymohmedyounus (Chennai )[15 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 8190
சகோதரர் ஹபீப் அவர்களுக்கு,
இங்கே,கமெண்ட் அடித்தவர்கள் எல்லோரும் தாய் சபையை பாராட்டவில்லை. அபுபக்கர் என்ற தனி நபரையே பாராட்டி இருக்கிறார்கள். அபுபக்கர் மூலமாக தாய் சபை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.அவ்வளவு தான்.
கண்ணியத்திற்குரிய காயிதமிள்ளத் கண்ட தாய் சபை இன்று இல்லை.
அன்னாரின் மறைவிற்கு பிறகு, வந்த தலைவர்களின் செயல்பாட்டின்மையாலும்,
விவேகமற்ற தன்மையாலும், அது சிறுக,சிறுக தேய்ந்து, இன்று அது தோழமை கட்சி என்று கூட அழைக்க தகுதி இழந்து, இன்று அது "கழகங்களின் சிறுபான்மை அணி" என்ற அந்தஸ்துக்கு தள்ளப்பட்டு விட்டது.
இதற்கு, கடந்த கால அதன் போக்கை பார்த்தல், அறிந்து கொள்ளலாம்.
இன்று முளைத்த கட்சியான கொங்கு வேள முன்னேற்ற கட்சிக்கும், ம.ம க விற்கும் தனி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கும் கழகங்கள், நூற்றாண்டு கட்சியான தாய் சபை கேட்டல் மட்டும் காத தூரம் ஓடுவதன் மர்மம் என்ன?
இதற்கு என்ன காரணம்என்ன? என்று சற்றேனும் அலசி பாருங்கள்.
கடந்த பாராளு மன்ற தேர்தலிலே, ராமநாதபுறத்தில் மட்டும் , ம.ம.க வை தனி சின்னத்தில் நிற்க சொன்ன கழகம் ,தாய் சபையை மட்டும்,வேலூரில் சூரியன் சின்னத்தில் நிற்க சொன்னதன் காரணம் என்ன ? என்பதை நாம் என்றாவது யோசித்து பார்த்தது உண்டா?
சட்டசபையில் ஜவஹிருல்லாஹ் ம.ம க உறுப்பினர். ஆனால், அப்துல் ரஹ்மான் தி.மு.க நாடாளு மன்ற உறுப்பினர் என்று தானே பதிவேட்டில் உள்ளது.
இது எப்போதாவது நம்மை உறுத்தியது உண்டா?
பிளவு பட்ட சமுதாய இயக்கங்களின் இணைப்பு விழா, காயித மில்லத் மன்ஜிலில் அல்லவா நடத்த பட வேண்டும். அண்ணா அறிவாலயத்தில் அல்லவே.!
துறைமுக தாய் சபை வேட்பாளர் அல்தாப் ஹுசைன் அவ்வாறு தானே இணைந்தார்.ஒரு வேலை, வை.கோ. தி.மு.க. வில் இனைய வந்தால் அதை காயித மில்லத் மன்ஜிலில் வைத்து நடத்த தி. மு. க அனுமதிக்குமா? இது நம் சுய மரியாதைக்கு விடப்பட்ட சவால் அல்லவா?
தாய் சபை நடத்திய எந்த சமுதாய மாநாட்டிலாவது, கழகங்களின் தலைவர்களை அழைக்காமல் நடத்தியது உண்டா? அதில், தோழமை கட்சி தலைவர்களை,கடை மட்ட தொண்டன் வரை முகம் சுளிக்கும் அளவுக்கு புகழ்ந்து பாராட்டி பேச உங்கள் தலைவர்களுக்கு எப்படி மனம் வந்தது? நீங்கள் அடிக்கும் போஸ்டர்களில் கூட, கண்ணியதிகுரிய காயித மில்லத், மரியாதைக்குரிய சிரார்ஜுல்மிள்ளதிற்கு பதில் அண்ணாவும், கருணாநிதியும், ஸ்டாலினும்,ஜெயலலிதா அம்மையாரும் தானே இடம் பிடித்தார்கள்.
கண்ணியத்திற்குரிய காயித மில்லத் கண்ட தாய் சபை, தேர்தலுக்கு மட்டும் பிறந்தது அல்லவே. மருத்துவ முகாம்கள், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட துயர் துடிப்பு பணி, கல்வி வழிகாட்டும் முகாம்கள், இரத்த தான முகாம்கள் ,
மதுவுக்கு எதிரான பிரச்சாரங்கள்- தாய் சபை நடத்தியது எத்தனை?
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் தாய் சபை, பாபரி மஸ்ஜித் போராட்டத்திற்கு போஸ்ட் கார்டு அல்லவா அனுப்ப சொல்லுகிறது.இதற்கு பெயர்தான்" இந்திய யூனியன் முஸ்லிம் லீகா?."
போராட்டம் நடத்தியவர்களை எல்லாம் தீவிரவாதிகளின் போராட்டம் என்றும், சமுதாயத்தை பிளவு படுத்த நடத்திய போராட்டம் என்று அல்லவா கொச்சை படுத்த பட்டது
இந்த காரணங்களை எல்லாம், கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எரிந்து சொல்ல தேவை இல்லை. கடை மட்ட தொண்டன் கூட அறிவான். விரக்தியில் இருக்கும் இன்னும் சில தொண்டர்கள் என் காதில் போட்ட குமுறல்களின் விளைவாய் இந்த மடல்.
என்றும் நட்புடன்
முஹம்மது யூனுஸ்.
முன்னால் நகர அமைப்பாளர்,
எம்.எஸ்.எப்.
காயல்பட்டணம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross