எதனால் புற்று நோய் வருகிறது ? posted byN.S.E.மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[10 November 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 827
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
புற்று நோய் ஏற்படுவதற்கு " இதுதான் காரணம்" என்று எவராலும் இதுவரை உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் புற்று நோய் வருவதற்கான அடையாளம் மற்றும் அறிகுறிகளை இனம் கண்டு நோயை குணப்படுத்துகிறார்கள்.
எப்படி, எதனால் புற்று நோய் வருகிறது என்பதை துல்லியமாக அறியாத வரை அதற்கு மருந்தும் கண்டுபிடிக்க முடியாது.
அதனால் புற்று நோய் வருவதற்கு DCW இல் இருந்து வரும் நச்சுக்காற்றும், செல் போன் டவர் கதிர் வீச்சு மட்டும்தான் காரணம் என்று சொல்லிக்கொண்டு மற்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் நாம் இருப்பது அறிவீனம்.
புற்று நோய் வருவதற்கான காரணங்களில் மேலும் சில:
= நாம் உட்கொள்ளும் உணவு வகைகளில் சில புற்று நோயை ஏற்படுத்தும், அவைகளை அவசியம் கண்டறிந்து தவிர்க்கவேண்டும்.
= ரீஃபைன்டு ஆயில் : இது கொலஸ்ட்ரால் ஃப்ரீ என்று உபயோகிக்கிறோம் ஆனால் எண்ணையை சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் கெமிக்கல் மூலமாக புற்று நோய் உருவாகிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
= தேநீர் : இது உடலுக்கு நல்லதுதான் அதிலே எந்த சந்தேகமுமில்லை. ஆனால் தேநீரை சூடாக அருந்தும்போது அதனால் தொண்டையில் புற்று நோய் வர வாய்ப்புள்ளது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். அதிக சூடு இல்லாமல் 4 - 5 நிமிடம் பொருத்திருந்து சாப்பிட்டால் பாதிப்பு இல்லையாம். அதே நேரத்தில் காஃபியை சூடாக சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லையாம்.
= மாட்டிறைச்சி : இதன் மூலமும் புற்று நோய் உருவாகிறதாம். இதை அதிகம் வேகவைத்தால் பாதிப்பு அவ்வளவாக இருக்காதாம். இருப்பினும் தவிர்ப்பதே அல்லது குறைத்துகொள்வதே! நல்லது.
= RED MEAT : சிவப்பு நிற இறைச்சி அதாவது ஆடு, மாடு, கோழி எந்த ஓர் இறைச்சியும் சிவப்பு நிறமாக இருக்குமாயின் அவைகளை தவிர்க்க வேண்டும்.
= சிகரெட் : இதை பற்றி விளக்க வேண்டியதில்லை இருந்தாலும் சிகரெட் பிடிப்பவரை மட்டுமில்லாது பக்கத்தில் உள்ளவர்களையும் அதிகம் பாதிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
= அரைகுறை வைத்தியம் : அதாவது பெரியவர்களுக்கோ, சிறுவர்களுக்கோ யாருக்காவது உடலிலே ஒரு கட்டி வந்தால், அல்லது அடிபட்டு புண் வந்தால் அது முழுவதுமாக குணமாகும் வரை மருந்துகளை போட்டு வைத்தியம் பார்ப்பதில்லை. அது கொஞ்சம் ஆறி வரும்போதே, ஆம், எல்லாம் சரியாகிடும் என்று மருந்துகளை தொடர்ந்து போடாமல் நிறுத்திவிடுவது. இதனால் என்னவாகும் ? அந்த புண் 'மேல்' பக்கம் மட்டும் ஆறும், உள்பகுதி அரைகுறையாகவே இருந்து பல வருடங்களுக்கு பின் அது சிலருக்கு புற்று நோயை ஏற்படுத்துகிறது.
எனவே நாம் தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து, உணவு வகைகளில் கவனம் செலுத்தி , உடல் பயிற்சியும் செய்து, சகோதரி நஃபீலா சொன்னதுபோல் சில பரிசோதனைகளையும் செய்து வந்தோமானால் அல்லாஹ்வின் அருளால் இந்த கொடிய நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
ஒன்று மட்டும் நிச்சயம் "எந்த ஒரு நோயிக்கும் மருந்தில்லாமல் இறைவன் அந்த நோயை நமக்கு அனுப்புவதில்லை " என்ற நம்பிக்கையை நாம் மறக்கக்கூடாது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையுமே இந்த நோயிலிருந்து காப்பாற்றுவானாக ஆமீன்.வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross