Re:அனிதா இன்று ஜாமீனில் வெள... posted byK S Muhamed shuaib (Kayalpatnam)[17 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8284
அண்ணாச்சி அனிதா அவர்கள் இன்று படும் கஷ்ட்டங்களை அவ்ர அ.தி.மு.க வில் இருந்தபோது அழகிரியின் மிரட்டலை எதிர்த்து துணிச்சலாக அன்று செயல்பட்டிருந்தால் இன்று அவருக்கு எந்த துன்பமும் இல்லை. இன்றையதினம் அவ்ர அமைச்சராகவும் இருந்திருப்பார்.
ஜெயலலிதா சில சமயம் சிலரை கடிந்துகொள்வார். வேறொரு சமயம் அவரையே மந்திரியாகவும் ஆக்குவார் இது ஜெயலலிதாவின் பிறவிகுணம். இதற்க்கு நிறைய உதாரணம் சொல்லலாம். ஆனால் அனிதா அவசரப்பட்டு வெளியேறிவிட்டார்.
ஜெயலலிதா அனிதாவை கைது செய்தது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை. அனிதா இன்று அடையும் துயருக்கு அவரே காரணம். எங்கோ பாத்திர வியாபாரம் செய்தவரை தொகுதிக்கு கொண்டுவந்து கட்சியில் சேர்த்து மாவட்ட செயலாளர் ஆக்கி எம். எல். எஆக்கி பிறகு மந்திரி ஆக்கி சகல அதிகாரமும் கொண்ட ஒரு மனிதராக்கி அழகு பார்த்த ஜெயாவுக்கு அவ்ர செய்தது "நம்பிக்கை துரோகம்: அல்லவா?
என்னதான் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராக ஆக்கி விட்டாலும் அவருக்கு தி. மு. க வில் என்ன மரியாதை இருக்கிறது? ஏதோ ஆண்டாண்டு கால தி.மு.க காரன் மாதிரி பேசுகிறார். தி மு. காவா இவரை அரசியலுக்கு அறிமுகம் செய்தது? தி.மு.காவா இவரை எம்.எல்.எ ஆக்கியது? அல்லது தி,மு,க இவருக்கு மந்திரி பதவி கொடுத்ததா?
அனிதா நல்லவராக இருக்கலாம். பெரும் கொடைவள்ளலாக இருக்கலாம். ஆனால் அரசியலில் நேர்மையும் வாக்கு தவறாமையும் இல்லாவிட்டால் பிரகாசிக்க முடியாது. அதற்க்கு அனிதா ஒரு நல்ல உதாரணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross