சிந்திக்க தூண்டும் மனசு ... posted byVilack Syed .Mohamed .Ali (Kangxi)[17 September 2011] IP: 218.*.*.* China | Comment Reference Number: 8291
அல்லாஹ் போதுமானவன் . அன்பார்ந்த காயல் நகர பெரியோர்களே ! தாய்மார்களே ! சகோதர சகோதரிகளே ! நமது மாநிலத்தின் முதலமைச்சரையும் , நாட்டின் பிரதமரையும் கூட எளிதாக தேர்ந்தெடுத்து விடலாம் . ஆனால் இந்த சிறிய நகராட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதில் , நமக்குள் எவ்வளவு ஆர்ப்பரிப்புகள் , விளம்பரங்கள் . தேவையா ? சற்று சிந்தியுங்கள் .
1 . நமதூரின் மொத்த ஜனத்தொகையில் வாக்குரிமை பெற்றவர்கள் என்று சுமார் 25000 பேர் வரைதான் உள்ளனர் . இதில் computer , internet பார்ப்பது ஒருசில ஆயிரம் பேர் மட்டுமே . அதிலும் பெரும்பாலானோர் வெளிநாட்டில் உள்ளனர். தேர்தலில் , ஒருவேளை போட்டி என்று வந்து , ஓட்டு போடும் சூழ்நிலை வந்தால் , இவர்களில் எத்தனை பேர் ஊர் வந்து ஓட்டு போட்டு தாம் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுப்பர் ?
2 . kayal .com இல் சுமார் ஒரு 50 பேர் வரைதான் மாற்றி மாற்றி கருத்துகளை பரிமாறுகிறார்கள் . ஒருவேளை இவர்களின் கருத்துகள்தான் ஒட்டுமொத்த ஊர் மக்களின் கருத்து என்று நினைத்து விட்டார்களா ? அப்படி நினைத்தால் அது உண்மையாகாது . ஊரில் உள்ள இதர பாமர மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் .
3 . அடுத்து மீடியா , இணையதளத்தின் மூலம் மட்டுமே ஊரின் எந்த பிரச்சினையையும் தீர்த்து விடலாம் என்று நினைப்பது தவறு .
4 . ஏற்கனவே நம் ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் பெரும்பாலானோர் , ஊர் மக்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே . அப்போதெல்லாம் இல்லாத ஒற்றுமையும் , விழிப்புணர்வும் இப்போது புதிதாக முளைத்திருக்கும் சங்கங்கள் மூலம் வரப்போகிறதா ?
5 . காயல் ஐக்கிய பேரவை :
---------------------------------------
இதைப்பற்றி உண்மை தெரியாமல் பலரும் , பலவிதமாக கருத்து தெரிவிக்கிறார்கள் . இதில் உள்ள பெரியவர்கள் யாரும் , பணத்திற்காகவோ , புகழுக்காகவோ அல்லது வேறு வேலை இல்லாமலோ இந்த பேரவையில் பணியாற்றவில்லை . சமீபத்தில் இவர்கள் எடுத்த முயர்ச்சியால்தான் , சுமார் 23 லட்ச ரூபாய் செலவில் நிலம் வாங்கி மின்சார வாரியத்திற்கு கொடுத்திருக்கிறார்கள் . ஐக்கிய பேரவையை குறை கூறுபவர்கள் யாராவது இதற்கென தங்கள் பங்கை அளித்துள்ளார்களா ? இது போக , அவர்கள் செய்த சேவைகள் நிறைய உள்ளன . அவர்களும் இந்த பணி சீரிய முறையில் தொடர இளைஞர்களைத்தான் அழைக்கிறார்கள் . நம்மில் எத்தனை பேர் அதில் சேர ஆர்வமாக உள்ளோம் ? அவர்களும் வயது முதிர்வின் காரணமாக இளைஞர்களுக்கு வழிவிட தயாராக உள்ளார்கள் . ஆகவே இணையதளத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் உண்மை தெரியாமல் எதைப்பற்றியும் குறை சொல்வதை தவிர்க்கவும் .
அந்தந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள் தங்களின் பகுதிக்கு உட்பட்ட வார்டு மெம்பர்களையும் , அனைத்து ஜமாத்துகள் மற்றும் ஐக்கிய பேரவையும் இணைந்து தலைவரையும் தேர்ந்தெடுப்பார்கள். இதில் வழி காட்டுகிறேன் , விழிப்புணர்வு ஏர்ப்படுத்துகிறேன் என்று சொல்லி MEGA என்றோ , OMEGA என்றோ பல்வேறு இயக்கங்கள் பெயரிலோ உள்ளே நுழைந்து சுய விளம்பரம் செய்ய தேவை இல்லை . மாஷா அல்லாஹ் , ஒவ்வொரு ஜமாத்திலும் மார்க்க அறிவு , உலக அறிவு பெற்ற பெரியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் . அவர்களுக்கு யாரும் புதிதாக வந்து விழிப்புணர்வு செய்ய தேவை இல்லை .
என் அன்பிற்கு உரித்தான பெரியோர்களே , தாய் மார்களே , சகோதர சகோதரிகளே , கவர்ச்சியான பேச்சுக்கள் , விளம்பரங்கள் கண்டு மயங்காதீர்கள் . சுய சிந்தனையுடன் செயல்படுங்கள் . அல்லாஹ் போதுமானவன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross