CFFC எங்கள் நன்றி உனக்கு! posted bykavimagan (dubai)[17 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8324
புற்றுக்கெதிரான மாபெரும் களப்பணியை துவங்கிவைத்த கத்தார்
ஹாங்காங் காயல்நல மன்றங்கள் நன்றிக்குரியவை.தொடர்ந்து
இந்த நோய்க்கு எதிரான பல்வேறு காரியங்களை திறம்பட
செய்து வரும் ஜித்தாஹ் உள்ளிட்ட காயல் நலமன்றங்கள்,
சமூக அமைப்புகள்,சமூக ஆர்வலர்களுக்கு காயல்மாநகரம்
நன்றிக்கடன் பட்டிருக்கிறது.வெளிநாடுகளில் மிகக் கடுமையாக
உழைத்து,கிடைக்கின்ற விடுமுறையில் ஊருக்கு வந்து,இது
போன்ற பணிகளுக்காக நேரத்தை ஒதுக்கி,அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்காக ,அவர்களின்
குடும்பத்தினருக்காக நாம் துஆ செய்வோம்.
இந்த நேரத்தில் CFFC யை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.சலீம் காக்கா அவர்களும்,கரீம் சாரும் இதனை
உருவாக்கிய போது, இதெல்லாம் தேவைதானா? என்று
ஏளனம் செய்த நண்பர்களே,பின்னாளில் பாராட்டிப் போற்றும்
அளவுக்கு,இதன் செயல்பாடுகள் அமைந்தது.
இதற்காக எந்தவித
பிரதிபலனையும் எதிர்பாராமல் இரவு பகலாக உழைத்த
காயல் பர்ஸ்ட் டிரஸ்ட் முஹம்மத் ஸாலிஹ் சார்,மண்ணின்
மைந்தன் சாளை நவாஸ் பாய்,எஸ்.கே.ஸாலிஹ் மச்சான்,
பாலப்பா ஜலாலி காக்கா,பல்லாக் சுலைமான் காக்கா,
என்ஜீனியர் தங்கப்பா சேக் அப்துல் காதர் காக்கா,இக்ரா தர்வேஷ்
காக்கா,இன்னும் பெயர் விடுபட்ட நல்லவர்கள்,பொருளாதார
மற்றும் தார்மீக ரீதியாக ஆதரவளித்த உலக நலமன்றங்கள்,
பெரியவர்கள்,நண்பர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
ஓர் அமைப்பைத் துவக்கி,பலரது கேலி,கிண்டல்,
நையாண்டி மற்றும் எதிர்மறை வெற்று விமர்சனங்களை எல்லாம் தாண்டி, அந்த அமைப்பின் உழைப்பு நகர மக்களை
சென்றடையும் நேரம்,வெகுஜன மக்களின் பாராட்டும்,துஆவும்
நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு CFFC நமது சமகால எடுத்துக்காட்டு.
காயல் மாநகர மக்களின் துயர் துடைக்க, அழைத்தபோதெல்லாம்
ஓடோடிவந்து பணியாற்றும்,தமிழக அரசின் தங்கப்பதக்கம்
பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்,ஐயா திரு.கோவிந்தராஜன்
அவர்கள்,மருத்துவர்.திருமதி.சசிப்ரியா கோவிந்தராஜன்,மற்றும்
உயர்திரு.சாலை பாதர்,திருச்சி ரோஸ் கார்டன் தன்னார்வப்
பணியாளர்கள்,மற்றும் கே.எம்.டி.மருத்துவ அறக்கட்டளையின்
மதிப்பிகுரிய பெரியவர்கள் அனைவருக்கும் நகர மக்களின்
சார்பாக நன்றியைத் தெரிவிக்கிறேன்.
நிறைவாக,நமது ஊருக்கு வரவிருக்கின்ற மருத்துவப்.பெருந்தகை
சாந்தா அவர்களையும், இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சகோதரர்களையும்,மனமாரப் பாராட்டி மகிழ்கின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross