Re:அனிதா இன்று ஜாமீனில் வெள... posted byK S Mohamed shuaib (Kayalpatnam)[18 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8360
என்னை அம்மாவின் அனுதாபி என்பதை விடவும் ஒரு பழம்பெரும் அ.தி.மு.க. விசுவாசி என்றால் பெருமை அடைவேன். இன்று அந்த அ .தி.மு.க "அம்மா"வின் தலைமையில் செயல்படுவதால் ஒருவேளை நண்பர் என்னை அப்படி விளித்திருக்ககூடும். தவறில்லை. இந்த உலகில் எல்லோரும் தவறு செய்கிறவேர்கள்தான்.
"அம்மா' உட்பட. வழக்கு சம்பந்தமாக கோர்டில் வாய்தா வாங்குவது ஒருவனின் சட்டப்படியான உரிமை. "வாய்தா" வாங்குவது சட்டப்படி தவறு என சட்டம் எங்காவது கூறி இருந்தால் அதை நண்பர் ரபீக் தாராளமாக நிருபிக்கலாம். அம்மா மீது கருணாநிதி போட்ட பதின்மூன்று வழகுகளில் கிட்டத்தட்ட பண்ணிஇரண்டு வழக்குகளில் கோர்ட்டில் முறைப்படி வாதாடி அவ்ர விடுதலை பெற்று இருக்கிறார். இந்த "பெங்களூர்" சாத்தானையும் அனேகமாக அவ்ர ஊதிவிடுவார்.
அன்று சர்காரியா கமிஷனில் இருந்து தப்பிக இந்திராகாந்தியின் காலில் விழுந்து கேவலப்பட்டதைப் போன்றும ;இன்று ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தப்பிக்க சோனியாவின் தயவை எதிர்பார்த்து ஏங்கி கிடப்பதை போன்றும் எங்கள் அம்மா ஒருபோதும் செய்யமாட்டார்.
காலம் மாறுமாம். யாருக்கு மாறும்? அடுத்த தேர்தலில் அ .தி.மு.க என்ற கட்சியே இருக்காது என்று உளறிய அஞ்சாநெஞ்சன் இன்று எங்கே? சட்டமன்றத்திற்கே வராமல் லண்டன் ஓடிய ஸ்டாலின் எங்கே? காலம் மாறியது உங்களுக்குத்தான். இனி காலம் ஒரு போதும் மாறாமல் இருக்கப்போவதும் உங்களுக்குத்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross