Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySahuban Ali (Dubai)[18 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8364
இங்கே தனது கருத்துக்களை எழுதியுள்ள விளக்கு முஹம்மது அலி அவர்கள் இதுவரை நகராட்சித் தேர்தல் குறித்து
எழுதியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து பார்த்தால், அதில் அப்பட்டமான உள்நோக்கமும், ஐக்கியப் பேரவையைத் தவிர
ஊர்னலனைக் குறித்த அக்கறை வேறு யாருக்கும் இருக்கக் கூடாதது என்ற வக்கிரமான எண்ணத்தை பதிக்கின்றார்.
அதோடு மட்டுமல்லாமல் ,சமூக விரோதிகளாலும், பல்வேறு கிரிமினல்களாலும், அசிங்கமான, கேட்க முடியாத, கெட்ட
வார்த்தைகளால் மொட்டைக்கடிதம் மற்றும் மின்னஞ்சலை பரப்பும், எடுபிடிகள் உருவாக்கி வைத்துள்ள OMEGA என்னும்
பொதுமக்களால் காரி துப்பப்படும் ஓர் இழிந்த, தன்னை திரைமறைவில் ஒளித்து வைத்திருக்கும் விஷமிகளின் பெயரை ஒவ்வொரு முறையும் மெகா அமைப்போடு இணைத்து எழுதி, மக்களுக்காக உழைக்கும் அவர்களை திட்டமிட்டு களங்கப்படுத்தி வருகின்றார்.
இதில் தீயினால் சுட்டபுண் உள்ளாறும் என்று திருக்குறளுக்கு விளக்கம் வேறு.
இதை எல்லாம் பார்க்கும் போது சில விஷயங்கள் தெளிவாகிறது. அதை எல்லாம் நான் இங்கே எழுதத் துவங்கினால், திட்டமிட்டு மற்றவர்களை காயப்படுத்துபவர்கள், நிம்மதியை இழக்க நேரிடும். சிலர் தானும் சமூகத்திற்கு எதுவும் செய்யாமல், நல்லது
செய்கின்றனர் என்று தெரிந்தும், மற்றவர்களை கேவலப்படுத்தும் அசிங்கமான யுக்தியை கையாளுகின்றனர்.
ஊருக்கு யார் நல்லது செய்தாலும் அவர்கள் ஊர் பெரியவர்களுக்கும், பேரவைக்கும் எதிரிகள் என்ற மாயத் தோற்றத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகின்றார்கள்.
வினை விதைப்பவன் வினையையும், தினை விதைத்தவன் தினையையும்தான் அறுக்க முடியும் என்பதனை இவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும். அல்லது எங்களைப் போன்றவர்கள், இவர்களின் திரைமறைவு சதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து திருத்த வேண்டியது வரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross