நன்றிக்குரியவர்கள்!. posted bykavimagan m.s.abdul kader (dubai)[20 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8507
காயல்மாநகரம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுள்
இன்றளவும் முதலிடம் வகிப்பது புற்றுநோயின் இரக்கமற்ற
தாக்குதலே!
தேர்தல், ஆட்சிமாற்றம், சமச்சீர்கல்வி இன்னும்
ஏராளமான விஷயங்கள் குறித்து நாம் விவாதம் செய்தும்,
களப்பணி ஆற்றியும் வந்தாலும் கூட, அவற்றையெல்லாம் விட அதிமுக்கியமானது புற்றுக்கெதிரான களப்பணிதான்.
இதனை தெளிவாக உணர்ந்துதான் கத்தர் காயல்நல மன்றம்
2009 ஆம் ஆண்டு தனது கையில் எடுத்த பணியை, மற்ற
உலகநல மன்றங்கள், சமூக அமைப்புகள், திருச்சி ரோஸ் கார்டன், கே.எம்.டி மருத்துவ அறக்கட்டளை மற்றும் சமூக
ஆர்வலர்களுடன் இணைந்து சற்றும் வீரியம் குறையாமல்
போராடி வருகிறது.
இந்த உன்னதப் போராட்டம் இன்னும் இன்னும் அதிக சக்திபெற CFFC இவர்களோடு, கரங்களைக் கோர்த்து களத்தில் நிற்கிறது. இவர்களுக்கு உறுதுணையாக டாக்டர்.கோவிந்தராஜன் சார் அவர்களது குழுவும், இப்போது மருத்துவ மாமேதை சாந்தா அம்மையாரும், நகர மக்களின் துயர் துடைக்கும் பணியில் கரம் கோர்க்க இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது, கடமை உணர்வுடன்
களப்பணியாற்றும் இவர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.
கத்தர் மன்றத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல
வல்லிறைவன் அருளோடு, வள்ளல் நபி ஆசியுடன், இந்தக்
கொடூர நோய் காயல் மண்ணிலிருந்து வேரோடு அகற்றப்பட,
இருகரமேந்தி இறைவனை இறைஞ்சிடுவோமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross