இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன் posted byShameemul Islam SKS (Chennai)[22 September 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 8636
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
மதிப்பிற்கும் மிகுந்த மரியாதைக்குமுரிய பெருந்தகை டில்லி முஹ்யித்தீன் ஹாஜி அவர்களின் மரணச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போனோம். இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்.
அவரது முகத்தில் என்றைக்கும் கோபத்தைப் பார்த்ததில்லை.
ஏனெனில் கோபத்திற்கு அவர்களைப் பிடிக்காது.
சிறியவர் முதல் யாரைக்கண்டாலும் "தம்பி சுகமா இருக்கிரியாமா?.... வாப்பா சுகமா இருக்கிரியாமா..........." எனக் கேட்பதுதான் இப்போதும் அவர்களை நினைக்கையில் ஞாபகம் வருகிறது.
யாருக்காவது ஏதாவது முக்கிய உதவிகள் தேவைப்பட்டால் உடன் அடுத்தவர் கேட்பது டில்லி 'முஹ்யித்தீன் ஹாஜியாரிடம் போனீங்களா' என்றுதான்.
15 வருடங்களுக்கு முன்பெல்லாம் நமதூரை கொள்கைப் பிரச்சினைகள் வெகுவாகப் பாதித்திருந்த போதெல்லாம் ஒவ்வொருவரும் தத்தமது கொள்கைக்காக பிற சகோதரர்களைப் பகைத்திருந்தபோது இவர்களைப் போன்றோர் மட்டும் உண்மை முஸ்லிம்களாகவே வாழ்ந்தார்கள்.
எனவே தான் யாரைப்பார்த்தாலும் இவர்களுக்கு வெளிப்படையாகவே சிரிக்க முடிந்தது. இவர்களே முந்தி ஸலாம் சொன்னார்கள். அல்லது ஸலாம் சொல்பவர்கள் யாரென்று பார்க்காமல் பதில் சொல்லவும் முடிந்தது.
இறுதிக்காலம் வரை பள்ளியோடுள்ள தொடர்புதான் தொழுதுவிட்டு வந்த உடனேயே அவரது இறுதி முடிவையும் துலங்கச் செய்திருக்கிறது.
அவர்களின் பிரிவை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். ஆனால், அல்லாஹ் தனக்குப் பிடித்தமானவர்களை அதிகம் வாழவைத்து கஷ்டப்பட வைத்து துன்புறுத்த மாட்டன். v
அல்லாஹ் அவர்களுக்கு மண்ணறையிலும் மறுமையிலும் மேலான பதவியைக் கொடுப்பானாக.
அவர்களின் பிரிவால் வாடி நிற்கும் அனைவருக்கும் அல்லாஹ் மனதில் சகீனத்தை நிலை நிறுத்துவானாக.
அன்பு காக்கா உவைஸ், தம்பி முஹம்மத் மற்றும் பிலால் ஆகியோருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களும் ஸலாமும் உரித்தாகட்டும்.
'இவர் பெற்ற பிள்ளைகள்தான் இவர்கள்' என மற்றவர்கள் உங்களை நினைத்து பெருமை படும் வகையில் நீங்களும் வாழ்ந்து காட்டி பிறருக்கு முன்னுதாரணமாய்த் திகழ வேண்டி அந்த வல்ல ரஹ்மானிடம் இருகரமேந்திப் பிரார்த்திக்கின்றோம்.
மிக்க அன்புடன்,
ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ். & குடும்பத்தார்கள்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross