Re:காவாலங்கா துணைத்தலைவர் டி... posted byN.M. MOHAMED ISMAIL (DUBAI.)[22 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8646
அஸ்ஸலாமு அழைக்கும்!
டெல்லி மெய்தீன் ஹாஜியார் ஒரு நல்ல மனிதரின் அடையாளம். இந்த நெட் மூளும் உங்களுக்கு தெரியபடுத்துவது என்ன வென்றால் அவர் கோபப்பட்டு பார்ப்பது மிக அரிது மேலும் அவர் யாரையும் கோபமாக பேசுவதோ கடும் சொல்லால் திட்டுவதோ கிடையாது. யாராவது தவறு செய்தால் சிரித்துகொன்டே அன்பாக திருத்தும் குணம் படைத்தவர்.
ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருது
டெல்லி மெய்தீன் ஹாஜியார் வீடு முன்னாடி ( சின்ன காலி இடம் ) ஒரு நாள் நாங்கள் கால் பந்து விளயாடிகொன்றிருந் தோம் அன்று அவர்கள் சூரிய வெளிச்சத்தில் கல் ( புஸ்பராகம் ) பார்பதற்காக வீடு வெளியே வந்து பார்த்து கொண்டு இருந்தார்கள் அப்பொழுது கால் பந்து அதில் பட்டு கல் எல்லாம் சிதறிவிட்டது அவர்கள் பொருமைய்யாக ஒவ்வொன்றாக பொருக்கி எடுத்து எங்களை பார்த்து தம்பிமார்களா கோலை பார்த்து கால் பந்து அடியுங்கள் ஆளை பார்த்து அடிக்காதிர்கள் என்று சிரித்துகொண்டு அன்பாக சொல்லிவிட்டு சென்றார்கள்.
மேலும் சில நேரங்களில் எங்களுடென் வந்து கால் பந்தை கிக் செய்வார்கள் அதனை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
இன்று அவர் இல்லை என்றாலும் அவருடைய அன்பான, பண்பான நற்குணங்கள் நம்மில் நிலைத்து நிற்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross