தோன்றிற் புகழோடு தோன்றுக ! மனதில் மறையாத மாமனிதர் மறு உலக யாத்திரை !! மக்கள் பிரியா விடை !!! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[22 September 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8661
அஸ்ஸலாமு அலை க்கும் (வரஹ்மத்துல்லாஹ்)
தோன்றிற் புகழோடு தோன்றுக! எனும் பொய்யா மொழிக்கேற்ப வாழ்ந்து மறு உலக வாழ்வை எய்திய , காயல் மா நகரின் மனிதருள் மாணிக்கமாய் விளங்கிய மா மனிதர் டெல்லி மெய்தீன் மாமா அவர்களின் வபாத்து தாங்க முடியாத துயரத்தை தந்திருக்கிறது. ஒட்டு மொத்த காயலின் சொந்தங்கள் அத்துனையுமே மர்ஹூம் அவர்களின் இறுதி பயணத்தில் சங்கமித்து ...து ஆ செய்து அனுப்பி வைத்த கூட்டமே இதற்க்கு ஒரு அத்தாட்சி.....
தர்ம சிந்தனை ...வாணிபத்தில் நேர்மை ...பிறர்க்கு .உதவுவதில் நிகர் அவர்களே ...இப்படியே நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம் ...இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக எங்களுக்கு அவர்கள் ஒரு ரோல் மாடலாகவே திகழ்ந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது ....என்னை பலமுறை தொடர்பு கொண்டு ஈகை பற்றி நிறைய அறிவுரை தந்த அந்த மகானை என் கண்ணால் ஒரு முறை கூட காண முடியாமல் போய் விட்டதே என்று இன்று கண்ணீர் வடிக்கிறேன்.
நான் ஊரில் வரும் காலங்களில் ( தங்குவதோ ஒரு சில நாட்கள் தானே) எல்லாம் அவர்கள் சபரில் ...நான் சபர் சென்ற பிறகு அவர்கள் தொலைபேசியில் ...இப்படியே சந்திக்காமல் காலமும் சென்று விட்டது .....
சிறியவனாக இருந்தாலும் தானாகவே அழைத்து வாழ்த்தி உற்சாக படுத்தும் ஒரு உயர்ந்த பண்பாளர் அவர்கள் ....கண்ணால் காணவில்லை என்றாலும் கல்பால் உணர வைத்த உயர்ந்த மனிதரை உயிர் உள்ள வரை மறக்க முடியாது . எங்கள் சேவையில் அவர்களுக்கும் துஆ கிடைக்க ரப்புல் ஆலமீன் அருள் புரிவானாகவும் ....அவர்களின் உயரிய தர்ம சிந்தனையை நாங்கள் எங்களின் சிரமேற் ஏற்றதனால் !
அன்னாரது மக்கள் குடும்பத்தினர் சுற்றத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை வல்ல ரஹ்மான் வழங்குவானாகவும்! மர்ஹூம் டெல்லி மெய்தீன் மாமா அவர்களை அல்லாஹ் பொருந்தி ...மேலான சுவன பதியில் நிலையாக தங்க வைப்பனாகவும் ...ஆமீன் ..ஆமீன்...யா ரப்பல் ஆலமீன் !
துயரத்தில் பங்கு கொள்ளும் அன்பு நெஞ்சங்கள் ,
K.V.A.T. ஹபீப் /தோஹா/கத்தார்
மற்றும்
கே.வீ.,ஏ. டி. குடும்பத்தினர்
காயல் பட்டினம்
kvat.habib@gmail.com
00974 55657147
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross