பிச்சை சட்டியிலும் திருடும் கயவர்கள்......! posted byzubair (riyadh)[26 September 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8768
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பு என் காயல் சகோதரர்களே...... அடுத்தடுத்து வெளியாகும் நம் நகர்மன்றத்தின் செயல் பாட்டின் உண்மை நிலை வெளியாவதை பார்க்கும் போது நெஞ்சு பட,படக்கின்றன.... நாம் யாவரும் கவனக்குறைவாகவே இருந்துக்கொண்டு இருக்கிறோம். "அழுகின்ற குழந்தை தான் பால் குடிக்கும் என்பார்கள்". நாம் வாய் இருந்தும், பசி இருந்தும் அழுகாமல், புத்தி இருந்தும் சிந்திக்காமல், எல்லா ஆரோக்கியம் (பலமும்) இருந்தும் செயல் படாமல் பண்டைய பாலஸ்தீனர்கள் போன்று. புத்தி இருந்தும்... மந்த புத்தியாகவே...... இருந்துகொண்டு இருக்கிறோம்.
ஏன் இந்த அவல நிலை நமக்கு? நமக்கு கிடைக்க வேண்டிய எல்லாமே அரசு தரப்பில் கிடைக்கத்தான் செய்கின்றன நாம் தான் பயன் படுத்தாமல், நம் வரிப்பணத்தை திருடும் கயவர்களை தட்டிக்கேக்காமல் மாறாக ஊக்கு வித்து நமக்கு நாமே......... வயிற்றில் அடித்து ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கிறோம்.
அன்பு காயலர்களே............ பொதுநல ஊர் அமைப்புகளே... நம் நகராட்சிமீது இனியாவது கவனம் செலுத்துங்கள். ஓடி அலைந்து பணம் சம்பாதிக்கும் நாம்.... நம் கவனக்குறைவால் நம் தலைமாட்டில் உள்ள நம் கஜானாவை திருட்டு கூட்டம்கள் திருடுவது மட்டும் அல்லாமல், நமக்கு கிடைக்கும் எல்லா வசதிகளையும் கிடைக்க செய்யாமல், மேலும் நம் முதுகிலேயே.... வேல் பாச்சி நம்மையே..... காரி உமிழும் திருட்டு கயவர்களை இனம் கண்டு கொண்டு நகராட்சியை மீட்டாலே...... போதும். நாம் கணவாகவே..... நினைத்துக்கொண்டு இருக்கும் நமது ஊரின் சுத்தம், சுகாதாரம், ஊர் பெருமை எல்லாம் கைகூடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross