இரு பெருநாட்களையும்(நோன்பு, ஹஜ் ) ஒற்றுமையுடன் இணைந்து கொண்டாடுவோம். posted bymujahidh (kayalpatnam)[10 November 2010] IP: 123.*.*.* India | Comment Reference Number: 879
அஸ்ஸலாமு அழைக்கும்.
பிறை பிரட்சினையை களைந்து மக்கள் அனைவரும் இரு பெருநாட்களையும்(நோன்பு, ஹஜ் ) ஒற்றுமையுடன் இணைந்து கொண்டாடுவோம்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது."கடந்த 7-11-2010 அன்று துல்கைதா மாதம் 30-ம் இரவில் தமிழகத்தில் எந்த ஊரிலும் பிறை பார்க்கப்படவில்லை". (தமிழ்நாட்டு பிறை மட்டும்)
சுன்னத் ஜமாஅத்.
இவ்வருட ஹஜ் பெருநாள் குறித்து தமிழக அரசு தலைமை காஜியிடம் காயல்பட்டணம்.காம் விசாரித்தது. அப்பொழுது தலைமை காஜி டாக்டர் முப்தி காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் சார்பாக தமிழகத்தில் நவம்பர் 7 அன்று மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக பிறை எங்கும் தெரியவில்லை என்றும், மகாராஷ்டிரா மாநிலம் மலேகாவ்ன் நகரில் துல்ஹஜ் பிறை தென்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. (இந்திய பிறையாக மாற்றப்பட்டுள்ளது)
தலைமை காஜி அவர்கள் தமிழ்நாட்டு பிறையில் இருந்து இந்திய பிறைக்கு மாறியுள்ளார் (அதாவது இந்தியாவில் எங்கு பிரைபார்கப்பட்டலும் அதை ஏற்கலாம்) என்று அறிவுப்பு செய்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ். இது வரவேற்க்கத்தக்கது. அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே பெருநாள் என்ற அடிப்படைக்கு இவர்கள் எடுத்துவைக்கும் முதல் மைல்கள்.
“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. ( 3:103)
“(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியகாவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (3:183)
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். (36:39)
‘அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)
‘நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இருநாட்களும் நோன்பு நோற்பதற்கு அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி)
குழப்பத்திற்குரிய காரணங்களை அகற்றுவோம்.....?
1. பிறைகள் காலத்தை அறிவிக்கும் என்றும், ஹஜ்ஜை அறிவிக்கும் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
காலத்தை அறிவிக்கும் என்றால், ஊருக்கு மட்டுமா...? அல்லது மாவட்டத்திற்கு மட்டுமா...? அல்லது மாநிலத்திற்கு மட்டுமா...? அல்லது நாட்டிற்கு மட்டுமா..? அல்லது உலக முழுக்க அறிவிக்குமா...?
சிந்தியுங்கள் மேற்கூறிய வசனம் பொதுவாக இறக்கப்பட்டுள்ளதா...? அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் இறக்கப்பட்டுள்ளதா...?
2. பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள். இந்த
இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவானதாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம் பெறும் சூமூ(Soomoo) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத்(Ru’yath) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது.
‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’. என்று ஹதீத் தெளிவாக சொல்கின்றது.
ஒரு ஊரில் இருந்து பிறையை பார்த்ததாக இரு சாட்சிகளின் அறிவிப்பு அந்த ஊருக்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது அந்த மாவட்டத்திற்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது அந்த மாநிலத்திற்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது அந்த நாட்டிற்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது முழு உலகத்திற்கே கட்டுப்படுத்துமா...?
இரு சாட்சிகளின் அறிவிப்பு எதுவரை கட்டுப்படுத்தும் என்பது தான் கண்ணியத்திற்குரிய அணைத்து உலமாக்களுக்குள் இருக்கும் பிரச்சினையே. இந்த உலமாக்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்து விட்டால் இந்த சர்ச்சை முடிவு பெற்று விடும். அவர்கள் அனைவரும் அல்லாஹுவிற்கு பயப்படக்கூடியவர்களாக இருந்தால் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் இல்லையென்றால் இதே நிலை தான் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
மக்கள் அனைவரின் வேண்டுகோள்..
உலமாக்கள் மற்ற விசயங்களிலும் அவரவர் விருப்பப்படி எப்படியும் இருந்து கொள்ளட்டும். ஆனால் இரு பெருநாள் விஷயத்தில் ஒற்றுமையாக இருக்க கூடாதா என்று கேட்கின்றனர். இந்த மக்களின் அழைப்பு என்று உலமாக்களின் காதுகளில் விழுமோ என்று தெரியவில்லை.
“எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான் வேதனை உண்டு”. ( 3: 105)
“ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross