இவ்வருட ஹஜ் பெருநாள் குறித்து தமிழக அரசு தலைமை காஜியிடம் காயல்பட்டணம்.காம் விசாரித்தது. அப்பொழுது தலைமை காஜி டாக்டர் முப்தி காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் சார்பாக தமிழகத்தில் நவம்பர் 7 அன்று மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக பிறை எங்கும் தெரியவில்லை என்றும், மகாராஷ்டிரா மாநிலம் மலேகாவ்ன் நகரில் துல்ஹஜ் பிறை தென்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. காஜி அலுவலகத்தின் அறிக்கை பின் வருமாறு:-
ஹிஜ்ரி 1431 துல்கய்தா மாதம் 29ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை துல்ஹஜ் மாத பிறை மால்கான் காணப்பட்டது. ஆகையால் திங்கள்கிழமை ஆங்கில மாதம் 8.11.2010 தேதி அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சியிக்கபட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) 17.11.2010 புதன்கிழமை கொண்டாடப்படும்.
Idd ul Azha (Bakrid) on Wednesday, 17, November, 2010
2. இரு பெருநாட்களையும்(நோன்பு, ஹஜ் ) ஒற்றுமையுடன் இணைந்து கொண்டாடுவோம். posted bymujahidh (kayalpatnam)[10 November 2010] IP: 123.*.*.* India | Comment Reference Number: 879
அஸ்ஸலாமு அழைக்கும்.
பிறை பிரட்சினையை களைந்து மக்கள் அனைவரும் இரு பெருநாட்களையும்(நோன்பு, ஹஜ் ) ஒற்றுமையுடன் இணைந்து கொண்டாடுவோம்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது."கடந்த 7-11-2010 அன்று துல்கைதா மாதம் 30-ம் இரவில் தமிழகத்தில் எந்த ஊரிலும் பிறை பார்க்கப்படவில்லை". (தமிழ்நாட்டு பிறை மட்டும்)
சுன்னத் ஜமாஅத்.
இவ்வருட ஹஜ் பெருநாள் குறித்து தமிழக அரசு தலைமை காஜியிடம் காயல்பட்டணம்.காம் விசாரித்தது. அப்பொழுது தலைமை காஜி டாக்டர் முப்தி காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் சார்பாக தமிழகத்தில் நவம்பர் 7 அன்று மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக பிறை எங்கும் தெரியவில்லை என்றும், மகாராஷ்டிரா மாநிலம் மலேகாவ்ன் நகரில் துல்ஹஜ் பிறை தென்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. (இந்திய பிறையாக மாற்றப்பட்டுள்ளது)
தலைமை காஜி அவர்கள் தமிழ்நாட்டு பிறையில் இருந்து இந்திய பிறைக்கு மாறியுள்ளார் (அதாவது இந்தியாவில் எங்கு பிரைபார்கப்பட்டலும் அதை ஏற்கலாம்) என்று அறிவுப்பு செய்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ். இது வரவேற்க்கத்தக்கது. அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே பெருநாள் என்ற அடிப்படைக்கு இவர்கள் எடுத்துவைக்கும் முதல் மைல்கள்.
“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. ( 3:103)
“(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியகாவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (3:183)
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். (36:39)
‘அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)
‘நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இருநாட்களும் நோன்பு நோற்பதற்கு அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி)
குழப்பத்திற்குரிய காரணங்களை அகற்றுவோம்.....?
1. பிறைகள் காலத்தை அறிவிக்கும் என்றும், ஹஜ்ஜை அறிவிக்கும் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
காலத்தை அறிவிக்கும் என்றால், ஊருக்கு மட்டுமா...? அல்லது மாவட்டத்திற்கு மட்டுமா...? அல்லது மாநிலத்திற்கு மட்டுமா...? அல்லது நாட்டிற்கு மட்டுமா..? அல்லது உலக முழுக்க அறிவிக்குமா...?
சிந்தியுங்கள் மேற்கூறிய வசனம் பொதுவாக இறக்கப்பட்டுள்ளதா...? அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் இறக்கப்பட்டுள்ளதா...?
2. பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள். இந்த
இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவானதாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம் பெறும் சூமூ(Soomoo) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத்(Ru’yath) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது.
‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’. என்று ஹதீத் தெளிவாக சொல்கின்றது.
ஒரு ஊரில் இருந்து பிறையை பார்த்ததாக இரு சாட்சிகளின் அறிவிப்பு அந்த ஊருக்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது அந்த மாவட்டத்திற்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது அந்த மாநிலத்திற்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது அந்த நாட்டிற்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது முழு உலகத்திற்கே கட்டுப்படுத்துமா...?
இரு சாட்சிகளின் அறிவிப்பு எதுவரை கட்டுப்படுத்தும் என்பது தான் கண்ணியத்திற்குரிய அணைத்து உலமாக்களுக்குள் இருக்கும் பிரச்சினையே. இந்த உலமாக்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்து விட்டால் இந்த சர்ச்சை முடிவு பெற்று விடும். அவர்கள் அனைவரும் அல்லாஹுவிற்கு பயப்படக்கூடியவர்களாக இருந்தால் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் இல்லையென்றால் இதே நிலை தான் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
மக்கள் அனைவரின் வேண்டுகோள்..
உலமாக்கள் மற்ற விசயங்களிலும் அவரவர் விருப்பப்படி எப்படியும் இருந்து கொள்ளட்டும். ஆனால் இரு பெருநாள் விஷயத்தில் ஒற்றுமையாக இருக்க கூடாதா என்று கேட்கின்றனர். இந்த மக்களின் அழைப்பு என்று உலமாக்களின் காதுகளில் விழுமோ என்று தெரியவில்லை.
“எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான் வேதனை உண்டு”. ( 3: 105)
“ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
3. who is true? posted bysulaiman niyaz (ruwais)[10 November 2010] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 884
assalamualaikum, tamilnadu government kazi VS thoothukudi dt kazi eid moon announcement!IN THE ABOVE WHO IS TRUE?plz let me know?society moulds men.so don't believe hearsay.ALLAH IS LOOKING UP.
4. very well written by brother mujahidh posted byMuhammad Ibrahim (China)[11 November 2010] IP: 59.*.*.* China | Comment Reference Number: 892
assalamu alaikkum,
i hope our kayal welfare associations around the world can take actions to celebrate eid on the same day throughout the kayalpatnam! i am sure this will happen one or the other day! simply all these leaders from each group are playing their own games which we are sure they have to answer to Allah.
A simple calculation for all of us to think, regardless of which group you are! when we celebrate eid on 3 days and we know keeping fasting on eid is haram so we can concretely say atleast one group is wrong which might be any one among the 3 groups! let us wake up!!!
5. காஜி அறிவிப்பு! posted bykithuru mohideen (chennai)[11 November 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 898
http://www.kayalpatnam.com/shownews.asp?id=5013
கடந்த 07ஆம் தேதியன்று பின்னிரவில், தமிழகத்தில் பரவலாகப் பிறை பார்க்கப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு, இம்மாதம் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அரஃபா தினம் என்றும், 17ஆம் தேதி புதன்கிழமையன்று ஹஜ் பெருநாள் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை காழீ (காஜீ) முஃப்தீ ஸலாஹுத்தீன் அய்யூபி அறிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பின் அடிப்படையில் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
vs
இவ்வருட ஹஜ் பெருநாள் குறித்து தமிழக அரசு தலைமை காஜியிடம் காயல்பட்டணம்.காம் விசாரித்தது. அப்பொழுது தலைமை காஜி டாக்டர் முப்தி காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் சார்பாக தமிழகத்தில் நவம்பர் 7 அன்று மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக பிறை எங்கும் தெரியவில்லை என்றும், மகாராஷ்டிரா மாநிலம் மலேகாவ்ன் நகரில் துல்ஹஜ் பிறை தென்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது
6. Excellent Mujahid posted byA.M.Syed Ahmed - Riyadh (Riyadh - KSA)[11 November 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 899
Very good comment Mujahid..
Neil Amstorng landed MOON on 20th July 1969, After 41 years of his mission still we are fighting for MOON SIGHTING where he step his foot, Don't we feel shame ?
Come on let us accept the Science which is not conflicting with QURAN & Hadiths..
We all with the different Schools of thought are following the STD timing based on Science in FARTH,(Sun & Lunar Eclipse) prayers ... why Don't we follow same for TWO EID's festivals which is only allowed to celebrate in ISLAM..
Change your EID prayer timings (also) as per Sunnah not as per your will & wish to 10AM to 11AM which is no where in the World... Think.
This is time to unite Brothers, Don't give the chance to the common enemy to WIN...
7. மக்கள் ஈத் என்ற சந்தோசத்திற்கு பதிலாக, வேதனையை அனுபவிக்கின்றனர். posted byMUJAHIDH (kayalpattanam)[11 November 2010] IP: 123.*.*.* India | Comment Reference Number: 901
administrator:
this is comments page. not discussion board. hence message not allowed.
8. NEED EXPLANATION posted byZainul abdeen (Dubai)[11 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 909
”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ
பகுதி எது என்பது குறித்து பலவிதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முடிவில் மொழியாலும் தனி நிர்வாகத்தாலும் ஒருங்கிணைக்க்கப்பட்டுள்ள தமிழகம் என்பது நமது பகுதி என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அது போல் சுன்னத் ஜமாஅத்தினரும் இந்த அடிப்படையில் தான் முடிவு செய்து வந்தனர்.
கடந்த பல வருடங்களில் வட மாநிலங்களில் பிறை பார்க்கப்பட்டு அவர்கள் நொன்பு நோற்ற போது தமிழகத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத்தினரும் நாமும் அதை ஏற்காமல் தமிழகத்தில் பிறை காணப்பட்டதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து வந்துள்ளோம்.
டெல்லிக்கு ஒரு பெருநாள் சென்னைக்கு ஒரு பெரு நாள் என பல வருடங்களாக இருந்து வந்ததை நாம் மறந்து விட முடியாது.
அந்த அடிப்படையில் இந்த மாதம் தமிழகம் முழுவதும் நாம் சல்லடை போட்டு விசாரித்ததில் எங்கும் பிறை பார்க்கப்படவில்லை என்பது உறுதியானது. பிறை காணப்படாத போது இதற்கு முன் நாம் எவ்வாறு முடிவு எடுத்து வந்தோமோ அவ்வாறு முடிவு எடுப்பது தான் முரண்பாடு இல்லாத கொள்கை முடிவாக இருக்க முடியும்.
இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் எங்கும் பிறை காணப்படாத நிலையில் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டதைப் பின்பற்றி முடிவு செய்தால் எதிர் காலத்தில் ஆண்டு தோறும் மீண்டும் குழப்பங்கள் தொடர் கதையாகி விடும். நபிவழியை மீறியதாகவும் ஆகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்
9. வழங்கப்பட்ட நேரத்தை பயன்ப்படுத்துவோம் posted bymujahidh (kayalpattanam)[11 November 2010] IP: 123.*.*.* India | Comment Reference Number: 913
அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோதரர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.
“யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது)
“உமக்கு எது பற்றி அறிவு இல்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாகச் செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக்கூடியனவாக இருக்கின்றன.” (திருக்குர்ஆன் 17:36)
குழப்பத்திற்கு காரணாமாக இருக்கும் அணைத்து உலமாக்களும் நிச்சயமாக அல்லாஹுவை பயந்து கொள்ளட்டும். அல்லாஹ் அவர்களை விசாரிக்கு முன் தங்களை தாங்கள் விசாரித்து கொள்ளட்டும். அல்லாஹ் அனைத்தையும் விசாரிக்க கூடியவனாக இருக்கின்றான்.
'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மெளனமாம்) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'.புகாரி 7081
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள். புகாரி 7061
சகோதரர்களே! இன்றைய கால சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியது அல்லாஹுவை நினைவு கூறுவது தான், அதை விட்டு நாம் எங்கே திசை திருப்பபடுகின்றோம். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்தட்டும்.
யா அல்லாஹ்! உள்ளங்களை திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக! (முஸ்லிம் 4798)
''அறிமுகமான நாள்களில் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர்வர்'' (திருக்குர்ஆன் 22:28)
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல" என்று நபி(ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) கூறினார்கள். புகாரி 969
பிரார்த்தனைகளில் மிகச் சிறந்த பிரார்த்தனை அரஃபா தினத்தன்று கேட்கும் பிரார்த்தனைதான்! நானும் எனக்கு முன்சென்ற நபிமார்களும் கூறியவைகளில் மிகச் சிறந்த -திக்ர்- லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாPக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் என்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : திர்மிதி)
ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகிய நான்கு வார்த்தைகளும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் :ஸமுரா பின் ஜுன்துப் -ரலி, நூல் : முஸ்லிம்)
அல்லாஹ்வைப் புகழ்வதுடன், அவனைத் தூய்மைப் படுத்து கிறேன். மகத்தான அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்.
இன்னும் ஏராளமான இபாதத்துகள் உள்ளன அதை நாம் கடைபிடிப்போம் இன்ஷா அல்லாஹ்.
உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. (108:2)
நாம் அல்லாஹுக்காக செய்வோம், பிறை குழப்பத்திற்காக அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான். பொறுப்பில் உள்ளவர்கள் உலமாக்கள் பதில் சொல்லட்டும்.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தன் பிரiஜகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுக்குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்று சொன்னதாக எண்ணுகிறேன் என்று கூறினார்கள். புகாரி 2558
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross