ஐக்கிய அரபு அமீரகம் - துபையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அமீரக காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது அமீரக காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 26/11/2010 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, துபை ஸத்வாவில் அமைந்துள்ள அல்ஸஃபா பூங்காவில் (அல்ஸஃபா பார்க்) - நுழைவாயில் 2 (Gate 2) வளாகத்தில் நடைபெற உள்ளது.
நம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும், இதர காயலர்களும் முற்கூட்டியே தங்கள் குடும்பத்தோடு வருகை தந்து கலந்து சிறப்பிப்பதன் மூலம், நகர்நலப் பணிகளில் தங்களையும் உட்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாகன வசதி...
கலந்துகொள்வோருக்கு பகல் உணவு...
ஆண்கள் - பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேடிக்கை விளையட்டுப் போட்டிகள்...
என அனைத்து ஏற்பாடுகளும் நிறைவாகச் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஏற்பாடுகளையும் திருப்தியுற செய்திடும் பொருட்டு, உறுப்பினர்கள் அனைவரும் தமது வருகையை முற்கூட்டியே பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
கூட்ட விபரங்களறிய...
Janab Essa – 0502165549 (or) husseineasa@yahoo.com – for general inquiries
போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்தறிய...
Janab Azad – 050-2766034 – For Passenger Transport arrangement
Abu Dhabi:
Mr. M.O. Ansary – 050-6157891
Mr. Maqbool – 050-6904600
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத்தலைவர்,
அமீரக காயல் நல மன்றம். |