ஹஜ்ஜின் போது அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் வசதிக்காக சவுதி அரசாங்கம் வான்வழி முதலுதவி ஊர்தி (AIR AMBULANCE) இவ்வருடம் முதல் அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை சவுதி செம்ப்பிறை (RED CRESCENT) சங்கம் இயக்கும். இதற்கான பயிற்சிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்று செம்ப்பிறை சங்க இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புனித ஸ்தலங்கள், கரையோர சாலையில் உள்ள அல் லைத் பகுதி, மக்கா - மதினா சாலை அருகே உள்ள அல் ஹெம்னா பகுதி மற்றும் அல் சுமைசி பகுதிகளில் பரிசோதனை முறையில் பறக்கும் பயிற்சிகள் நடந்தன.
மேலும் மினாவில் ஜமாரத் பாலத்தில், அரபா மைதானத்தில், புனித ஸ்தலங்களில் அல் நூர் மற்றும் ஹிரா மருத்துவமனைகளில், மதினாவில் மன்னர் பஹத் மருத்துவமனையில் வான முதலுதவி ஊர்தியை தரை இறக்கும் பயிற்சிகள் நடந்தன.
இச்சேவை 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |