சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட (3rd AC) வாராந்திர, குளிர்கால சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து ஒவ்வொரு புதனும் (நவம்பர் 17 முதல்), திருநெல்வேலியில் இருந்து ஒவ்வொரு வியாழனும் (நவம்பர் 18 முதல்) ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து இறுதி ரயில் டிசம்பர் 15 அன்றும், திருநெல்வேலியில் இருந்து இறுதி ரயில் டிசம்பர் 16 அன்றும் புறப்படும்.
சென்னையில் இருந்து புறப்படும் ரயில் எண் 06013. சென்னையில் இருந்து இந்த வண்டி புதன்கிழமைகளில் இரவு 9:50 க்கு புறப்பட்டு திருநெல்வேலியை மறுநாள் மதியம் 12:15க்கு சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் எண் 06014. திருநெல்வேலியில் இருந்து இந்த வண்டி வியாழக்கிழமைகளில் மதியம் 3:45க்கு புறப்பட்டு சென்னையை மறுநாள் காலை 6 :45க்கு சென்றடையும்.
இவ்விரு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு இன்று (நவம்பர் 11) துவங்கியது. இந்த வண்டி 13 ஏசி கோச்சுகளை கொண்டிருக்கும். இவ்வண்டியில் பயணம் செய்ய கட்டணம் ரூபாய் 756 ஆகும்.
இந்த ரயில் சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி மார்க்கத்தில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்படிரிபுளியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி வழியாக செல்லும். திருநெல்வேலியில் இருந்து வரும்போது மாம்பலம் ரயில் நிலையத்திலும் நிற்கும்.
|