தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமேலவை வாக்காளர் பட்டியலில பெயர் சேர்க்க 8 ஆயிரத்து 85 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமேலவை அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக கடந்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிக்கு விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. இதில் பட்டதாரிகளுக்கு படிவம் 18, ஆசிரியர்களுக்கு படிவம் 19 வழங்கப்பட்டது.
அதன்படி பட்டதாரிகள், ஆசிரியர்கள் படிவங்களை பெற்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வந்தனர். அதன்படி கடந்த 06ஆம் தேதியுடன் பெயர் சேர்க்கும் பணி முடிவடைந்தது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 85 பட்டதாரிகளும், 2 ஆயிரத்து 533 ஆசிரியர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிற 22ஆம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
அதன்பிறகு பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு 07.12.2010 வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 29.12.2010 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross