காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி நிரஞ்சனம் மனநல மன்றம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கம் இணைந்து, உலக மனநல நாள் மற்றும் நிரஞ்சனம் மனநல மன்ற 125ஆம் வார விழா, 31.10.2010 ஞாயிற்றுக்கிழமை மதியம் 03.00 மணி முதல் 05.00 மணி வரை, காயல்பட்டினம் ஏ.கே.எம். நகரிலுள்ள துளிர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை செயலரும், அரிமா மாவட்ட கேபினட் சமூக நலத்துறை செயலருமான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் முன்னிலை வகித்தார்.
துளிர் அறக்கட்டளை செயலரும், காயல்பட்டினம் அரிமா சங்க துணைத்தலைவருமான எம்.எல்.ஷேக்னா லெப்பை வரவேற்றுப் பேசினார். துளிர் நிறுவனர் தலைவர் வழக்குறைஞர் எச்.எம்.அஹ்மத் அப்துல் காதர், நிரஞ்சனம் மனநல மன்ற தலைவர் டாக்டர் எம்.வரதராஜன், துளிர் மறுவாழ்வு மைய தலைவர் ஏ.வஹீதா ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர், துளிர் மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி தருவை பாலசரண்யா மனநல காப்பாகத்தைச் சார்ந்த தனபாண்டியன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மனநலம் சம்பந்தமான குறும்படம் திரையிடப்பட்டது. துளிர் அறக்கட்டளை உறுப்பினர் வி.எஸ்.ஏ.ஆயிஷா நன்றி கூற, ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் பிரார்த்தனையுடன் விழா நிறைவுற்றது. |