மக்கா, மதீனாவில் இந்திய ஹாஜிகளுக்கான வசதிகள் குறித்து இந்திய தூதரகம் விரிவான தகவல் வழங்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது :-
கடந்த இருவருடங்களாக சவுதி அரசாங்கம் ஹரம் ஷரீப் உட்பட பிற விரிவாக்க பணிகளுக்காக 2000 க்கும் மேலான கட்டிடங்களை இடித்துள்ளது. அதில் பல கட்டிடங்கள் இந்தியர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டவை. பல இந்தியர்கள் ஹரத்திற்கு அருகே தங்கி ஐவேளை தொழுகையை ஹரத்திலேயே தொழவிரும்புகின்றனர். ஹரத்திற்கு அருகே தங்குவதற்கான கட்டிடங்களின் எண்ணிக்கை குறைந்தமையால் இது மிகவும் கடினமாகிவிட்டது.
சவுதி அரசாங்க விதிகளின்படி ஒருவருக்கு 4 சதுர மீட்டர் அளவு இடம் ஒதுக்க வேண்டும். மேலும் யாத்ரிகர்கள் அறையை பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். கட்டிடங்களுக்கு உரிமம் (LICENCE) வழங்கும் சவுதி அரசாங்கம் ஒவ்வொரு கட்டிடத்திலும் எத்தனை பேர் தங்கவேண்டும் என்றும் அறிவிக்கிறார்கள். இந்திய ஹஜ் குழு அவ்விதிகளுக்கு மீறி கூடுதலாக ஒருவரையும் தங்க வைப்பதில்லை. மேலும் இந்திய ஹஜ் குழு விதிகளின்படி 12 யாத்ரிகர்கள் ஒரு குளியலறையை பகிர்ந்து கொள்ளவேண்டும். 30 யாத்ரிகர்களுக்கு (கூடியது) ஒரு சமையல் அறை என வழங்கபடுகிறது. ஆகவே யாத்திரிகர்கள் தாங்கள் தங்கும் இடங்களை பகிர்ந்து கொள்ளவேண்டியது மிக அவசியம் என்ற மன நிலையை உருவாக்கி கொள்ளவேண்டும் .
மக்கா ஒரு மலை பிரதேசம். மக்காவில் பல இடங்கள் ஏற்ற பகுதிகளில் உள்ளன. ஆகவே யாத்ரிகர்கள் ஏற்ற-தாழ்வு பகுதிகளில் நடக்க தங்களை தயார் படுத்திகொள்ளவேண்டும்.
தங்கும் இடத்தை பொறுத்த வரை மதீனாவிலும் இதே நிலையே! அங்கும் யாத்திரிகர்கள் தாங்கள் தங்கும் இடத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கவேண்டும்.
|