இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் - மக்காவிலும், மதினாவிலும், மினாவிலும், அரபா மைதானத்திலும் - யாத்ரிகர்களுக்காக
சவுதி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள சேவைகள்/வசதிகளை கண்டு ஆச்சரியமும், சந்தோசமும் பட - புதிய ரயில் சேவை, வான்வழி
முதலுதவி ஊர்தி (AIR AMBULANCE), 5 மாடி ஜமாரத் பாலம் - என பல விஷயங்கள் உள்ளன. யாத்ரிகளுக்கு என்றே தனி விமான நிலையம்
போன்றவை பல ஆண்டுகளாக இயங்குகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹஜ் யாத்திரை எப்படி இருந்தது? 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம்
அமெரிக்க மாத இதழான THE NATIONAL GEOGRAPHIC MAGAZINE - பாகிஸ்தானை சார்ந்த அப்துல் கபூர் சேக் என்ற Harvard Business School மாணவரின் ஹஜ்
பயண அனுபவங்களை புகைப்படங்களுடன் From America to Mecca on Airborne Pilgrimage என்ற தலைப்பில் வெளியிட்டது.
|