எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, உள்ஹிய்யா நிறைவேற்றத்திற்காக காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆடு, மாடுகள் குவிக்கப்பட்டுள்ளன. ஓர் ஒட்டகமும் நகரை வலம் வந்துகொண்டிருக்கிறது.
ஆடுகள் நான்காயிரம் ரூபாய் முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் வரை அவற்றின் எடைக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாடுகள், நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் மூலம் கூட்டுமுறையில் உள்ஹிய்யா கொடுக்கப்படவுள்ளது. பங்கொன்றுக்கு ரூ.1200 முதல் 1600 வரை இதற்காக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜாவியாவில் நிறுத்தப்பட்டுள்ள காளைகள்...
குட்டியப்பா பள்ளியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ள காளைகள்
ஒட்டகம் ரூ.37000 தொகைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உள்ஹிய்யா ஏற்பாட்டுச் செலவுகளையும் உள்ளடக்கி ரூ.42000 தொகை செலவு மதிப்பிடப்பட்டு, பங்கொன்றுக்கு ரூ.6000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டகத்தை, ஹாஜி வாவு காதர் ஸாஹிப், மாஷாஅல்லாஹ் செய்யித், மாஷாஅல்லாஹ் தாவூத், எஸ்.அப்துல் வாஹித் (ஐ.ஐ.எம். டிவி), நிஜார் (எஸ்.டி.பி.ஐ.), பக்சி குளம் (சித்தன் தெரு) ஆகியோர் பங்குதாரர்களாக இணைந்து கொள்முதல் செய்துள்ளனர்.
மேய்ச்சலுக்காக ஒட்டகம் குட்டியப்பா பள்ளி மைதானத்தில் விடப்பட்டுள்ளது.
பங்குதாரர் மாஷாஅல்லாஹ் தாவூத் வீட்டருகே ஒட்டகத்துடன் குழந்தைகள்...
வரும் வியாழக்கிழமை காலையில் இந்த ஒட்டகம் உள்ஹிய்யா கொடுக்கப்படவுள்ளதாக பங்குதாரர்கள் தெரிவித்தனர். |