நவம்பர் 16ஆம் தேதியன்று (நாளை) அரஃபா தினம் என்றும், நவம்பர் 17ஆம் தேதியன்று (நாளை மறுதினம்) ஹஜ் பெருநாள் என்றும், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியில், மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் மற்றும் நகர அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஹிஜ்ரீ 1431, 15.11.2010 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில், துல்ஹஜ் பிறை விஷயமாக, மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி, ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா அரபிக்கல்லூரி மற்றும் காயல்பட்டினம் நகர அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் கூட்டுக்கூட்டம், மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி வளாகத்தில், அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளி கத்தீப் மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஆலிம் ஃபாஸீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
துல்ஹஜ் பிறை விஷயமாக நமதூரில் ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதால், அதுகுறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
அதில், 07.11.2010 அன்று ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் திங்கள் முன்னிரவில், காயல்பட்டினத்தில் பிறை பார்த்ததாக, நீதமான இரண்டு நபர்கள் இந்த உலமாக்கள் கூட்டத்தில் நேரில் தெரிவித்ததை தீர விசாரித்து, உலமாக்களால் ஏகமனதாக ஏற்கப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரகாரம், 07.11.2010 ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் திங்கட்கிழமை இரவு துல்ஹஜ் முதல் பிறை என்றும்,
அதன்படி, 16.11.2010 செவ்வாய்க்கிழமை அரஃபா தினம் என்றும், 17.11.2010 புதன்கிழமை ஹஜ் பெருநாள் என்றும் மீண்டும் உறுதிசெய்து, இக்கூட்டத்தின் வாயிலாக ஏகமனதாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில்,
மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ,
மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ,
எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம்,
மவ்லவீ ஹாஃபிழ் முத்துச்சுடர் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ,
மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ,
மவ்லவீ ஏ.கே.அபூமன்சூர் மஹ்ழரீ,
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ,
மவ்லவீ ஸலாஹுத்தீன் மளாஹிரீ,
மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ,
மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் மஷீஷ் காஷிஃபீ,
எம்.ஏ.எம்.சதக்கத்துல்லாஹ் (ச.த.),
மவ்லவீ ஹாஃபிழ் இர்ஷாத் ஃபாஸீ,
மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அப்பாஸ் காஷிஃபீ,
மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ,
மவ்லவீ எம்.எம்.நூர் முஹம்மத்,
மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எச்.முஹம்மத் நூஹ் ஃபாஸீ,
மவ்லவீ என்.எஸ்.மாமுனா லெப்பை,
மவ்லவீ ஹாஃபிழ் யாஸர் அரஃபாத் மஹ்ழரீ
ஆகியோர் கலந்துகொண்டனர். |