181 நாடுகளில் இருந்து சுமார் 18 லட்ச யாத்ரிகர்கள் தர்வியாஹ் தினமான (துல்ஹஜ் 8) நேற்று மினாவில் கூடினர். இவர்களில் 977,583 பேர் ஆண்கள் என்றும், 822,018 பேர் பெண்கள் என்றும் சவுதி அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்வழியாக 12 ,916 பேரும், தரை வழியாக 117 ,363 பேரும் மீதி அனைவரும் விமானங்கள் மூலமும் புனித தலங்களுக்கு வந்தடைந்துள்ளனர். யாத்ரிகர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 11 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாடுகளில் முழு நாளை நேற்று கழித்து விட்டு ஹஜ்ஜின் முக்கிய கட்டங்களில் ஒன்றான அரபா மைதானத்தில் கூட இன்று காலை மினாவை விட்டு அனைத்து யாத்ரிகர்களும் புறப்பட்டனர்.
புகைப்படங்கள்:
www.arabnews.com
|