இந்திய ருபாய் சுமார் 8000 கோடிக்கு அமைக்கப்பட்டுவரும் மஷேர் ரயில் இன்று அதிகாரபூர்வமாக சவுதி மற்றும் கல்ப் நாடு யாத்ரிகர்களுக்கு - முதற் கட்டமாக - திறந்து விடப்பட்டது.
அந்த ரயிலை பயன்படுத்துவோர் - கையில் கட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கும் டிக்கெட் (பார் கோட் பதிவுசெய்யப்பட்டது) - வாங்கி பயணம் செய்ய வேண்டும்.
அனைத்து திட்ட அம்சங்களும் - சவுதி உட்பட சீனா, பிரான்ஸ் போன்ற நாட்டு நிறுவனங்களால் - செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு
ரயில் பெட்டி 250 பேர் கொள்ளவு கொண்டது. அதில் 20 சதவீதம் அமர்ந்து பயணிக்கும் வகையிலும், 80 சதவீதம் நின்று பயணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
நடைமேடை ஒரு நேரத்தில் 3000 யாத்ரிகர்களை தாங்கும் அளவு அமைக்கப்பட்டுள்ளது. அது தவிர யாத்ரிகள் காத்திருக்கும் இடமும் ரயில்நிலையங்களில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
நடைமேடையில் நிற்கும் பயணிகள் தவறி தண்டவாளத்தில் விழுந்து விடாமல் இருக்கும் வகையாக கண்ணாடி தடுப்புகள் நடைமேடை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வண்டி கதவுகள் திறக்கும் போது அவைகளும் தானியங்கி முறையில் திறக்கும்.
யாத்ரிகர்களுக்காக எஸ்கலேட்டர்கள் மற்றும் மின்தூக்கிகள் பல ஒவ்வொரு ரயில்நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. மின்தூக்கிகள் ஒரே நேரத்தில் 50 பேரை ஏற்றி செல்ல வசதிகொண்டவை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross