அல்லாஹ்தஆலாவை நினைவு கூறக்கூடிய பள்ளி ஒன்றை எவரொருவர் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனபதியில் மாளிகை கட்டுகிறான் - அல்ஹதீத். நூல் - புகாரி.
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). ஈத் முபாரக்
சரித்திர புகழ்வாய்ந்த தொன்மை நகராம் காயல்பட்டணத்தில் தைக்காத் தெரு காட்டுத் தைக்காத் தெரு சந்திப்பில் இப்பகுதி மக்களின் இறைவணக்க வழிபாட்டினை செய்வதற்கு இப்பகுதி பெரியவர்கள் 1953ம் வருடம் காட்டுத் தைக்கா அரூஸிய்யாபள்ளி என்ற பெயரில் இப்பள்ளியைக்கட்டினார்கள். 15-09-1953ம் வருடம் ஹிஜ்ரி 1373 முஹர்ரம் பிறை 6 வெள்ளிக்கிழமை அன்று இப்பள்ளியை தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டது. பள்ளியின் வக்ஃபு வாரிய பதிவு எண் 484 ஆகும்.
கடந்த 56 வருடங்களைக் கடந்துள்ள இப்பள்ளி சென்ற மழையினால் சிதலமடைந்து வெடிப்பு உண்டாகி மழை ஒழுக்கு ஏற்பட்டு தொழும் இடம் எந்த நேரத்திலும் சுவர் இடிந்துவிழும் என்ற நிலை இருந்து வந்தது.
30-03-2007ல் ஜமாஅத் கூட்டத்தில் ரூபாய் முப்பத்து ஐந்து லட்சம் உத்தேச மதிப்பீடு செய்து பொதுமக்களிடம் நன்கொடை பெற்று இப்பள்ளியை இன்ஷா அல்லாஹ் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது.
கட்டிட பணிக்கான முறையான வரைபடம் காயல்பட்டணம் நகராட்சியின் அனுமதி, தமிழ்நாடு வக்ஃபு வாரிய தடையில்லா சான்று மற்றும் மாநில அரசு சம்பந்தப்பட்ட அலுவலக அனுமதி ஆகியவைகள் பெற்றவின் கடந்த 06-11-2009 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பின் அல்லாஹ் உதவியால் திரளானமக்கள் முன்னிலையில் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியின் புதிய கட்டிட பணி துவக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
அரூஸிய்யாபள்ளியில் நோன்பு பெருநாள் தொழுகை நிறைந்த கூட்டம
காட்டு தைக்கா அரூஸிய்யாபள்ளியின் வெளிப்புற தோற்றம்
பள்ளி கட்டிடத்தின் மேல்மாடி கட்டும் பணி
பள்ளி கட்டிடத்தின் மேல்மாடி உள்பக்க தோற்றம்
கடந்த ஒரு வருடகாலமாக பள்ளியின் கட்டிடபணி எழிலார்ந்த முறையில் உங்கள் அனைவர்களின் ஒத்துழைப்பால் வளர்ந்து வருகிறது. கடந்த 5 முறையாக காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் கட்டிட வளர்ச்சி புகைப்படத்;துடன் வெளியிட்டுள்ளோம். பள்ளியின் கீழ் பகுதி பணிகள் பொதுமக்களின் நிதி உதவியால் நிறைவு செய்துள்ளோம். கடந்த 01-11-2010 முதல் முதல்மாடி பணிகள் துவங்கி உள்ளோம். அதற்கான புகைப்படங்கள் கீழே காணலாம். கால செலவினங்கள் ஏறுமுகமாக உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் பள்ளி கட்டிடத்தின் இதர பணிகள் ஏராளம் உள்ளன. பொதுமக்களின் ஒத்துழைப்பினால் தான் இன்ஷாஅல்லாஹ் இவைகளை நிறைவு செய்ய இயலும். கட்டிட பணிகள் நடைபெறுவதை அறிந்த சகோதரர்கள் உள்ளுர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இதைபார்வையிடும் அன்பர்கள் சகோதர, சகோதரிகள் அல்லாஹ்வின் இப்பள்ளியின் கட்டிடத்தை நிறைவு செய்ய தாராளமாக நிதிஉதவி செய்து அல்லாஹ்வின் பேரருளை பெறுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் மாடிக்கான காண்கிரேட் போடும் பணி முழுபள்ளிக்கான மின்சார விளக்குகள் பொருத்தும்பணி மார்பல் டைல்ஸ் போடும்பணி பெயிண்டிங் மனாரா கட்டும்பணி மற்றும் இதர பணிகள் மீதம் உள்ளன. இவைகளெல்லாம் பொதுமக்களின் நன்கொடையே நம்பி உள்ளோம்.
நிதியினை
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
எஸ்.எம்.பி.மூஸா நெய்னா
வங்கி கணக்கு எண் - 19701
காயல்பட்டணம் கிளை
அல்லது
காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
வங்கி கணக்கு எண் - 18635
காயல்பட்டணம் கிளை
என்ற எண்ணுக்கு ஏற்பாடு செய்து தரவேண்டியது.
நன்றியுடன்
தலைவர் - செயலாளர் மற்றும் கட்டிடபணிக்குழு
தகவல்:
எம்.ஏ.காதர் அலி. |