ஹஜ் யாத்ரிகர்களுக்காக மஷேர் ரயில் (மக்கா மெட்ரோ) இன்று அதிகாரபூர்வமாக துவக்கப்பட்டுள்ளது. மினா, அரபா மற்றும் முஜ்தலிபா புனித ஸ்தலங்களை இந்த ரயில் சேவை முதற்கட்டமாக இவ்வாண்டு இணைக்கிறது. அடுத்த ஆண்டிற்குள் மக்கா நகரும் இச்சேவையில் இணைக்கப்படும்.
ஒவ்வொரு ஸ்தலங்களிலும் 3 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்து ரயில்கள் இம்மார்க்கத்தில் இயக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் 20 ரயில்கள் இயக்கப்படும். ஒவ்வொரு ரயிலும் 12 கோச்சுகளை கொண்டிருக்கும். 3000 யாத்ரிகர்கள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். மணிக்கு 72 ,000 யாத்ரிகர்கள் வரை கொண்டுசெல்லும் வசதி உள்ளது.
மணிக்கு 80 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில்கள் சுமார் ஐந்து நிமிடங்களில் புனித ஸ்தல தூரங்களை கடக்கும். துல்ஹஜ் 8/9 அன்று யாத்ரிகர்கள் மினாவில் இருந்து அரபா அழைத்து செல்லப்படுவர். பிறகு துல்ஹஜ் 9 மாலை அரபாவிலிருந்து முஜ்தலிபாவிற்கு அழைத்து செல்லப்படுவர். துல்ஹஜ் 10 அன்று முஜ்தலிபாவிலிருந்து மீண்டும் மினா அழைத்து வரப்படுவர்.
இவ்வாண்டு இச்சேவையை சவுதி உட்பட கல்ப் நாடு யாத்ரிகர்கள் - சுமார் 150,000 பேர் - மட்டும் பயன்படுத்துவர். அடுத்த ஆண்டு முதல் இச்சேவை அனைத்து நாட்டினர்க்கும் திறந்து விடப்படும்.
1. Makkah Metro posted byA.W.S (Kayalpatnam)[15 November 2010] IP: 123.*.*.* India | Comment Reference Number: 971
Welcome news for Haj pilgrims. Saudi government must have done this long ago. Unlike our country, they use the technology as soon as they appear in the market. Here they are way behind our country. As the saying goes "Better late than never" they can be congradulated for this project.
Allowing only Arabs for the first phase is showing their Arabi-Azami mentality.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross