சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, ஹஜ் பெருநாளை முன்னிட்டு காயல்பட்டினத்திலுள்ள நலிந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டது.
சுமார் 1000 ரூபாய் மதிப்பில், அரிசி, சமையல் எண்ணெய், சீனி உள்ளிட்ட 26 சமையல் பொருட்களடங்கிய பொதி, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள 37 நலிந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த சமையல் பொருட்களை வினியோகிக்கும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக, காயல்பட்டினம் மஹ்மூத் லெப்பை மற்றும் சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர் பாக்கர் ஸாஹிப் ஆகியோருக்கு, மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் ரஷீத் ஜமான் நன்றி தெரிவித்துள்ளார்.
உலக காயலர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |