நம் வானில் - சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்கள், விண்ணெரிகற்கள் போக பல காட்சிகள் உண்டு. சில வேளைகளில் - மாலை பொழுதில் - கடற்கரையில் அமர்ந்து வானை பார்த்துக் கொண்டு இருக்கும் போது திடீரென ஒரு பொருள் வானில் தோன்றி மெல்ல நகர்ந்து சென்றுக்கொண்டு இருப்பதை பலரும் கண்டிருப்பார். அது சிறுது தூரம் சென்றபின் மறைந்துவிடும்.
அது விமானமாக இருந்தால் நீண்ட நேரம் பார்க்க முடியும். நட்சத்திரமாக இருந்தால் நகராது. பின்னர் என்னவா இருக்கும் என்று பலர் வியந்ததுண்டு. பூமியை சுற்றிகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களில் ஒன்றாக கூட அது இருக்கலாம்.
KayalSky.com இணையத்தளத்தில் ஒவ்வொரு மாதமும் காயல் வானில் பூமியை சுற்றிவரும் HUBBLE TELESCOPE மற்றும் INTERNATIONAL SPACE STATION ஆகியவற்றை பார்க்க கூடிய நேரம் மற்றும் திசை வெளியிடப்படுகிறது (இவை இரண்டும் தவிர பல செயற்கை கோள்கள் காயல்பட்டணத்தில் தென்படும்).
|
|
காயல்பட்டணத்தில் HUBBLE TELESCOPE நவம்பர் மாதம் 1, 2 மற்றும் 12 முதல் 21ம் தேதி வரையும் தென்படும். INTERNATIONAL SPACE STATION நவம்பர் 17 முதல் 20 வரையிலும், பிறகு நவம்பர் 23 முதல் 26 வரையிலும் தென்படும். மேலும் நேரம் மற்றும் தெரியும் திசையினை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதற்கான விளக்கப்படம் KayalSky.com இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது.
காயல் தவிர பிறவூர்களில் வசிப்போர் www.heavens-above.com என்ற இணையதளத்தில் அவர்கள் ஊர்களில் இச்செயற்கை கோள்கள் தென்படும் நேரங்களை அறிந்துகொள்ளலாம்.
|