அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி சார்பில் இன்று காலை 7:30 மணிக்கு காயல்பட்டண கடற்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடந்தது. பள்ளி இமாம் நெய்னா முஹம்மது அவர்கள் தொழவைக்க, பள்ளி கதீப் அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் பேருரை ஆற்றினார். சுமார் 1300 பேர் இத்தொழுகையில் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்தபின் இத்திஹாதுல் இஹ்வானுல் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) - பைத்துல்மால் வகைக்காக நிதி திரட்டப்பட்டது. பெண்கள் பகுதியில் இருந்து ரூபாய் 34,400 யும், ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 33 ,601 யும் திரண்டது. ஆக மொத்தம் ரூபாய் 68,001 திரட்டப்பட்டது.
தொழுகைகான ஏற்பாடுகளை இத்திஹாதுல் இஹ்வானுல் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல்:
எம். ஏ. அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு. |