காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் முவ்வொலி நாதாக்களின் 399ஆவது கந்தூரி வைபவம் 07.11.2010 முதல் 14.11.2010 வரை நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்வைபவத்தில், தினமும் அதிகாலை சுப்ஹு தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. தினமும் இரவு 08.30 மணிக்கு மார்க்க அறிஞர்களால் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது.
07.11.2010 அன்று, சிங்கப்பூர் ஜாமிஆ சுலியா மஸ்ஜிதின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ - ஹஜ்ஜும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜியாரத்தின் அவசியமும் என்ற தலைப்பிலும்,
08.11.2010 அன்று, கே.என்.நூஹ் முஹ்யித்தீன் மஹ்ழரீ - காதிரிய்யா தரீக்காவின் சிறப்புகள் என்ற தலைப்பிலும்,
09.11.2010 அன்று, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி அரபி ஆசிரியர் மவ்லவீ ஏ.எச்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ - திக்ரின் சிறப்புகள் என்ற தலைப்பிலும்,
10.11.2010 அன்று, காதர் மீராஸாஹிப் ஆண்டவர்கள் ஜும்ஆ பள்ளியின் இமாம் மவ்லவீ எச்.ரஹ்மத்துல்லாஹ் உதுமானீ - அவ்லியாக்களின் சிறப்பு என்ற தலைப்பிலும்,
11.11.2010 அன்று, கே.என்.நூஹ் முஹ்யித்தீன் மஹ்ழரீ - வஸீலாவும், ஈஸால் தவாபும் என்ற தலைப்பிலும்,
12.11.2010 அன்று, எஸ்.எம்.எச்.முஹம்மதலி சைஃபுத்தீன் ரஹ்மானீ கலீஃபத்துல் காதிரீ ஸூஃபீ - பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரன்பு என்ற தலைப்பிலும்,
13.11.2010 அன்று, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ - இஸ்லாமும், இன்றைய சூழலும் என்ற தலைப்பிலும்,
14.11.2010 அன்று, மவ்லவீ டபிள்யு.எம்.எம்.செய்யித் முஹம்மத் ஆலிம் - முவ்வொலி நாதாக்களின் சரித்திரமும், உள்ஹிய்யாவின் சிறப்புகளும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
14.11.2010 அன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றது. 15.11.2010 அன்று காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் முவ்வொலி நாதாக்கள் கந்தூரி கமிட்டியினர் செய்திருந்தனர்.
படங்கள்:
J.M.அப்துர்ரஹீம் காதிரீ,
மகுதூம் தெரு, காயல்பட்டினம். |