ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நேற்றிரவு காயல்பட்டினம் நகரின் கடைவீதிகள் களையுடன் காணப்பட்டன. பிரதான வீதி, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை ஆகிய பகுதிகள் ஓரளவுக்கு பரபரப்புடன் காணப்பட்டது. துணிக்கடைகளிலும், இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் அலைமோதின.
எனினும், மழை சிறிது சிறிதாக பெய்து கொண்டிருந்ததாலும், வெவ்வேறு தினங்களில் பெருநாள் கொண்டாடப்படுவதாலும், வழமையை விட கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
|