காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், அதன் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ், அனைத்து காயலர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
அன்பின் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் இனிய ஹஜ் பெருநாளை நாம் மகிழ்வுடன் கொண்டாடி வருகிறோம். இறைத்திருத்தூதர் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சுயநலமற்ற வாழ்வு, மார்க்கத்தில் உறுதியான பற்று, இறைவனுக்காக எதையும் செய்யும் தியாக மனம் ஆகியவற்றை நினைகூரும் வகையில் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள இந்த தியாகத் திருநாளில், நாம் அனைவரும் பொதுநலச் சிந்தனை மிகைத்தவர்களாகவும், சுயநலமற்றவர்களாகவும், அல்லாஹ்வுக்காக எதையும் செய்யும் மனம் பெற்றவர்களாகவும், இறைவனுக்காகவே வாழ்பவர்களாகவும் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக...
இந்த நன்னாளில் உலக காயலர்கள் அனைவருக்கும் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அகங்கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்ளைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பாக,
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்,
கவ்லூன், ஹாங்காங். |